முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மழை வேண்டி கன்னிமார்,கருப்பசாமி கோவில் திருவிழா

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

ஆண்டிபட்டி -தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அமச்சியாபுரம் எல்லை பகுதியில்  மழை வேண்டி ஏழு ஊர் பொது மக்கள் சப்த கன்னிமார்,கருப்பசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.இத்திருவிழாவை ஏழு கிராமத்தை சேர்ந்த அனைத்து சமுதாய மக்கள் ஒன்று சேர்ந்து சுமார் 300ஆண்டுகளாக கொண்டாடி வருகின்றனர்.இதில் ஒவ்வொரு கிராமத்தின் பங்களிப்பாக வடநாயக்கன்பட்டியில் இருந்து மண் எடுத்து கன்னிமார்,கருப்பசாமி சிலைகள் செய்யப்பட்டு குன்னூர் வழியாக அமச்சியாபுரம் எல்லை பகுதிக்கு வந்து கண் திறக்கப்படும்.இதில் குன்னூரிலிருந்து இலைகட்டு,சமையல் பாத்திரங்களும்,அமச்சியாபுரத்தில் இருந்து மளிகை,அரிசி,தண்ணீர் மற்றும் பூஜை பொருட்களும்,பந்துவார்பட்டியில் இருந்து சமையல் பொருட்கள்,ஜீ உசிலைபட்டி இருந்து உருமிகளுடன் எம்.சுப்புலாபுரத்தில் இருந்து பூசாரியையும்,மரிக்குண்டுவிலிருந்து சூலிஆடு எனப்படும் சினையுள்ள ஆட்டையும் முறைப்படி அழைத்துக் கொண்டு அமச்சியாபுரம் எல்லை பகுதிக்கு வந்து அங்கிருந்து கன்னிமார் மலைஉச்சிக்கு சென்று சினையுள்ள ஆட்டை பலி கொடுத்து அதனை சமைத்து அனைவருக்கும் அன்னாதானம் வழங்குகின்றனர்.இவ்வாறு செய்வதால் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. இவர்கள் செல்லும் வழி கனவன் கோவலனுக்காக மதுரையை எரித்து விட்டு அவேசமாக  கண்ணகி நடந்து சென்ற பாதை என்று கூறப்படுகிறது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து