திருக்கருக்காவூரில் மகாத்மா காந்தி சிலை பூண்டி வாண்டையார் திறந்து வைத்தார்

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      தஞ்சாவூர்

 

தஞ்சை மாவட்டம் திருக்கருக்காவூர் அக்னி சிறகுகள் அறக்கட்டளை சார்பில் மகாத்மா காந்தி.அப்துல் கலாம் சிலைகள் திறப்பு விழா, விருது வழங்கும் விழா, உள்ளிட்ட ஐம்பெரும் விழா நடைபெற்றது, அனைவரையும் வரவேற்று சோழன் பள்ளி செயலாளர் நல்லூர் ரெங்கராஜன் பேசினார். கம்யூனிஸ்ட் கட்சி தேசிய குழு உறுப்பினர் சி.மகேந்திரன் தலைமை வகித்தார்

மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ரெங்கநாதன், டாக்டர் அப்துல் கலாம் பவுண்டேசன் நிறுவனர் ஷேக் சலீம், ஆகியோர் முன்னிலையில் மகாத்மா காந்தி சிலையை பூண்டி வாண்டையார் திறந்து வைத்தார்.அப்துல் கலாம் சிலையை நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா திறந்து வைத்தார், நம்மாழ்வார் விருதை சி.மகேந்திரன் வழங்கினார்வ ழக்கறிஞர் ஜீவக்குமார், நெல் ஜெயராமன், இயற்கை விவசாயி மயில்வாகணன், மேலூர் அருண், கார்திகேய சிவ சேனாதிபதி, மண்வாசனை மேனகா திலகராஜன், மாணவி சரண்யா, பரிமளா தேவி, ஆரண்யா அல்லி, ஆகியோருக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட்டது அக்னி சிறகுகள் விருது எழுத்தாளர் ரேவதி குறும்பட இயக்குனர் பிரியா பாபு, செய்தி வாசிப்பாளர் பத்மினி பிரகாஷ், டாக்டர் செல்வி சந்தோசம், திருநங்கை கிரேஸ் பானு, எழுத்தாளர் சுவேதா சுதாகர், தாய் மடி அறக்கட்டளை தேவி, திரைப்பட கலைஞர் ஜீவா சுப்ரமணியன், தேனி ஆராதானா, ஆட்டோ ஓட்டுநர் திருநங்கை ராகினி, ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நல்லாசிரியர் விருது பூண்டி பேராசிரியர் இரா.சாந்தி, தலைமை ஆசிரியை பேரளி ஜான்சிராணி. அருட்சகோதரிவேம்பார் அருள் ஷீலா, மதுரை பாண்டீஸ்வரி, நெடுவயல் முகமது உசேன், வெள்ளியணை தனபால்.முத்துப்பேட்டை செல்வசிதம்பரம், விழுப்புரம் கணபதி.ஈரோடு லோகநாதன், கிருஷ்ணகிரி சத்தியசீலன் ஆகியோர் பெற்றனர்.

விழாவில் முனைவர் பழவேட்ரையர், வழக்கறிஞர் திருமாவளவன், கவிஞர் ராகவ் ரமேஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அக்னி சிறகுகள் அறக்கட்டளை நிறுவனர் நெடுஞ்சேரி கோ.சிவசண்முகம் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து