முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய வாய்ப்புகளை திறக்கும் எழுச்சி இந்தியா ஜிபோட்டியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை

புதன்கிழமை, 4 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

ஜிபோட்டி: எழுச்சி இந்தியா திட்டமானது ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை திறந்துவிடுவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜிபோட்டியில் உரையாற்றினார்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறைப்பயணமாக ஆப்பிரிக்க நாடான ஜிபோட்டிக்கு சென்றார். அவர் அங்குள்ள இந்திய மக்களிடையே உரையாற்றினார்.

அப்போது ஜனாதிபதி பேசியதாவது:-
இந்திய ஜனாதிபதியாக ஆப்பிரிக்கா வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நமக்கும், ஆப்பிரிக்க கண்டத்திற்கும் இடையே உள்ள நட்புறவை வளர்க்கும் விதமாக இந்த வருகை அமையும். இந்தியா வளர்ச்சியடைந்து கொண்டுவருகிறது. எழுச்சி இந்தியா திட்டமானது, ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை திறந்துவிடுகிறது. இந்தியர்கள் எங்கிருந்தாலும் அந்த இடத்தில் வேரூன்றி இருக்க வேண்டும். வாய்ப்புகளை தவற விடக்கூடாது.
 
மேலும், 2015-ம் ஆண்டு ஏமன் நாட்டில் சிக்கியிருந்த இந்தியர்களை காப்பாற்ற உதவியதற்காக ஜிபோட்டி அரசிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ஏமனில் சிக்கியிருந்த இந்திய மக்கள் ஆபரேசன் ரகாட் என்ற பெயரில் மீட்கப்பட்டு ஜிபோட்டிக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் இந்தியாவுக்கு பத்திரமாக அழைத்து செல்லப்பட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து