முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொள்கைகளை வடிவமைக்க புதிய சிந்தனை முறை தேவை: மன்மோகன்சிங் பேச்சு

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: திட்டக் கமிஷன் இல்லாததால் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் கொள்கைகளை உருவாக்க புதிய சிந்தனைகள் தேவை என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஸ்கூல் ஆஃப் இகனாமிக்ஸ் கருத்தரங்கத் தொடக்க உரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது:
“வளர்ச்சித் திட்டம் மற்றும் திட்டக் கமிஷன் ஆகியவை பொருளாதாரச் சமத்துவமின்மையை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை. தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கியதோடு பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் வித்திட்டது. சமூக-பொருளாதார ஜனநாயகம் மலராமல் அரசியல் ஜனநாயகம் வெற்றியடையாது என்று டாக்டர் அம்பேத்கர் உறுதியாக நம்பினார்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் ஆர்பிஐ கவர்னர் சி.ரங்கராஜன் கூறும்போது, நிறுத்தப்பட்டத் திட்டங்கள் உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்பதே இப்போதைய உடனடித் தேவை. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 2007-09-ல் 8 சதவீதம் முதல்  9சதவீதமாக  இருந்தது.
2008-ல் முதலீட்டு விகிதம் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 38சதவீதம் இருந்தது, தற்போது 27.4சதவீதமாக ஆகக் குறைந்துள்ளது. வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி தொழிற்துறையினருடன் நெருக்கமான பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். திட்டங்களை வேகமாக அமல் படுத்த வேண்டும்.
“நம் தேர்வு முறைகள் மாற வேண்டும், நம் மதிப்பீட்டு முறையும் மாற வேண்டும், அப்போதுதான் நல்ல ஆய்வும், நல்ல பொருளாதார நிபுணர்களும் நமக்குக் கிடைப்பார்கள்” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து