முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திறனாய்வு போட்டிகளில், சிறந்த படைப்புகள் படைத்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் :கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் வழங்கினார்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி கலெக்டர்  சஜ்ஜன்சிங் ரா.சவான் ,  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம்,   மாவட்ட அளவிலான திறனாய்வுபோட்டிகளில், சிறந்த படைப்புகள் படைத்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை, நாகர்கோவில், கோணம் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில்  வழங்கினார்.கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள், தொழிலாளர்கள்  தங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், தொழிற்சாலைகளும், கல்வி நிறுவனங்களும் நவீன தொழில்நுட்பம் சார்ந்த எண்ணங்களையும், புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்க ஒரு களத்தினை ஏற்படுத்தவும், தழிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் மூலம், மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.  இதன் முதற்கட்டமாக, மாவட்ட அளவில் இத்திறனாய்வு  போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் முதலாவதாக தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்பு படைத்த மாணவ, மாணவியர்களை, மாநில அளவில் கலந்து கொள்வதற்கு, பரிந்துரைக்கப்படுகிறது. இப்போட்டியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களைச் சார்ந்த 240 மாணவ, மாணவியர்கள்  கலந்து கொண்டனர்.   இப்போட்டியில் இயந்திரவியல்  மின்னியல் மற்றும் மின்னனுவியல்  மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்   ஆகிய மூன்று துறைகளை சார்ந்த 65 படைப்புகள்  மாணவர்வகளால் காட்சிக்கு வைக்கப்பட்டது. முன்னதாக, கலெக்டர்  கல்லூரி மாணவ, மாணவியர்கள் படைத்த படைப்புகளை பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், பொறியியல் கல்லூரி முதல்வர் டி.வி.எஸ். பிள்ளை, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஹைச். லெட்சுமணன் மற்றும் பேராசிரியர் எஸ். ஆதிமூலம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து