முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் பள்ளியில் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      தூத்துக்குடி
Image Unavailable

வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் மேல் நிலைப்பள்ளியில், டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுப்பது குறத்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.டெங்கு ஒழிப்பு தினத்தை முன்னிட்டு வீரபாண்டியன்பட்டினம் புனித தோமையார் மேல் நிலை பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும நோக்கத்தில் சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியை ரோஸிராணி பர்னாந்து தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அனைவரும் டெங்கு ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். பின்னர் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் பொன்ரவி, மருத்துவர் பாவநாசகுமார், சித்தா மருத்துவர் செந்தாமரைசெல்வி, இயற்கை யோகா மருத்துவர் ஹரிஹரன் ஆகியோர் டெங்கு கொசு மற்றும் டெங்கு காய்ச்சல் உறுவாகிறதை தடுக்கும் முறைகளை குறித்தும், டெங்கு காய்ச்சல் பரவுகிறதை தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் பேசினர். பின்னர் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ மாணவிர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து