முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியத்தில் டெங்கு தடுப்பு பணிகள் : கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார் நேரில் ஆய்வு

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      நாகப்பட்டினம்
Image Unavailable

நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஒன்றியம் திருமணங்குடி, காமேஸ்வரம், திருப்பூண்டி ஆகிய இடங்களில் டெங்கு தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் முனைவர்.சீ.சுரேஷ்குமார், நேரில் ஆய்வு செய்து பின்னர் தெரிவித்ததாவது,

 கொசுஒழிப்பு பணி

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி உள்ளாட்சி அமைப்புகள், மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான களப்பணியாளர்களை போதுமான அளவிற்கு நியமித்து குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை போர்கால அடிப்படையில் அகற்றிட வேண்டும். கொசு ஒழிப்புக்கு தேவையான கொசு நாசினி மற்றும் கொசுப்புழு நாசினி போன்றவை போதுமான அளவில் கையிருப்பில் வைத்துக்கொண்டு கொசு ஒழிப்பு பணியில் தினமும் ஈடுபட வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் தேவையான அளவில் குளோரின் கலந்து விநியோகிக்க அனைத்து உள்ளாட்சி அமைப்புகள், குடிநீர் வடிகால் வாரியங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைத்து அரசு கட்டிடங்களிலும் கொசு உருவாகும் இடங்களை கண்டறிந்து கொசு ஒழிப்பு பணியை பொதுப்பணி துறையினர் முழுமையாக மேற்கொள்ள வேண்டும். அனைத்து கல்வி நிலையங்களிலும், விடுதிகளிலும், தலைமையாசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மற்றுமு; விடுதிக்காப்பாளர்களின் மேற்பார்வையில் கொசு ஒழிப்பு பணிகளை முடுக்கி விடவேண்டும். அங்கன்வாடி, சத்துணவு மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி தி;ட்டப்பணியாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் மூலமாக அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள மையங்களில் கொசு உற்பத்தியாகாமல் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொசக்கள் உற்பத்தியாகாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி மருத்தவரீதியாக தேவையான அனைத்து வசதிகளையும் உநுதி செய்ய வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டில் வசதிகள், மருந்துகள், நோய் கண்டுபிடிக்கும் கருவிகள், தேவையான ரத்தம் மற்றும் தட்டணுக்கள் ஆகியவை போதுமான அளவிற்கு இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் நிலவேம்பு குடிநீர் அரசு மருத்துவமனைகளில் மட்டுமல்லாமல் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் அனைவருக்கும் சுகாதார துறையினர் வழங்க வேண்டும்.

டெங்கு காய்ச்சல்

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொசு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டிலும் கொசு புழு ஒழிப்பு பணி மேற்கொள்ளும் பொழுது வீட்டின் உரிமையாளர்களையும் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தி வருங்காலங்களில் அவர்களே தங்களின் வீடுகளில் கொசு புழு உற்பத்தியாகாவண்ணம் தடுக்க பயிற்சி அளிக்க வேண்டும். வீட்டின் உரிமையாளரிடம் டெங்கு கொசு புழு எவ்வாறு உற்பத்தியாகிறது, அது எவ்வாறு உற்பத்தியாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதை அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் சேகரிக்கப்பட்ட கொசு புழுக்களை மாதிரியாக காண்பித்து விளக்கிட வேண்டும். மேலும் டெங்கு காய்ச்சல் வருவதை தடுக்கும் பொருட்டு அரசு அலுவலர்கள் தங்கள்; அலுவலகங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுமாறும் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வை பணிபுரியும் அனைத்து அலுவலர்களுக்கும் சுகாதார கல்வி அளிக்க வேண்டும். மேலும் மேல்;நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் சிமெண்ட் தண்ணீர் தொட்டிகள் மற்றும் சின்டெக்ஸ் போன்றவற்றை கொசுப்புகாவண்ணம் நன்றாக மூடிவைக்க வேண்டும். வாரம் ஓருமுறை தண்ணீரை வடிகட்டி பீளிச்சிங் பவுடரை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். மேலும் பள்ளிவளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களையும் பிரதி வாரம் வியாழக்கிழமை தோறும் சுத்தம்; செய்;து எடீஸ் கொசுப்புழு உருவாகும் எந்த கலன்களும் இல்லை என்ற சான்று அறிக்கையினை துணை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.இரா. செல்வகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அலுவலர்கள், மருத்துவர்கள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து