முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெங்கு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் வெங்கடாசலம் துவக்கி வைத்தார்

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

  தேனி மாவட்டம், தேனி-அல்லிநகரம் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மற்றும் போடிநாயக்கனூர் ஜமீன்தாரிணி காமுலம்மாள் நினைவு மேல்நிலைப்பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம்,  தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சுகாதாரமான தமிழகத்தினை உருவாக்கிட எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவியர்கள் டெங்கு காய்ச்சலிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். தங்கள் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத் ்க வேண்டும். மழை காலங்களில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாக இருக்கும். எனவே கொசு உற்பத்தியாகும் இடங்களான சிமெண்ட் தொட்டிகள், தண்ணீர்த்தொட்டி, ஆட்டுக்கல், பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், தேங்காய் ஓடுகள், இளநீர் குடுவைகள், உபயோகப்படுத்தப்பட்ட பாட்டில்கள், உபயோகமில்லாத மீன் தொட்டிகள், உபயோகமில்லாத பாத்திரங்கள், டயர்கள், குடம், வாளி, திறந்த நீர் தொட்டி, காலி பெயிண்ட் டப்பா, டிரம்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீடுகளில் உள்ள தண்ணீர் குடம், தண்ணீர்;த்தொட்டி, டிரம்கள் ஆகியவற்றில் கொசு புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலுக்கு அருமருந்தாகும். மாணவ, மாணவியர்கள் லேசான காய்ச்சல் இருக்கும் போதே நிலவேம்பு கசாயம் குடிக்கலாம். மாணவ, மாணவியர்கள் டெங்கு விழிப்புணர்வு பற்றி தங்களை சுற்றியிருப்பவர்களிடம் தெரியப்படுத்த வேண்டும்.
மேலும், தேனி மாவட்டம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாவட்டமாக மாறி வருகிறது. பொதுமக்கள் தமிழக அரசு அளிக்கும் ரூ.12,000ஃ- மானியத்தினை பயன்படுத்தி; திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமல் வீடுகளில் தனிநபர் கழிப்பறையினை கட்டி பயன்படுத்த வேண்டும்.;
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல், தலைவலி, கை, கால், மூட்டுகளில் வலி, கண்களில் பின்புறம் வலி மற்றும் தோலில் சிறு, சிறு சிகப்பு தடிப்புகள் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாகும். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  ந.வெங்கடாசலம், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சுகாதார உறுதிமொழியினை வாசிக்க அனைவரும் பின்வருமாறு “நான் எனது வீட்டிலோ, வீட்டின் சுற்றுப்புறத்திலோ டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உபயோகமற்ற பிளாஸ்டிக் கப்புகள் போன்ற பொருட்களை போட மாட்டேன். அவ்வாறு ஏதேனும் வீணான பொருட்கள் கிடந்தாலும் அவற்றை உடனே அகற்றி விடுவேன். எனது வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் குடங்கள், சிமெண்ட் தொட்டிகள், டிரம்கள் ஆகியவற்றை கொசு புகாத வண்ணம் மூடி வைப்பேன். வாரம் ஒருமுறை தேய்த்துக் கழுவி சுத்தம் செய்வேன். இதன் மூலம் ஏடிஸ் கொசுப்புழு வளராமல் தடுப்பேன். நான் கற்றுக்கொண்டவற்றை அண்டை, அயலார்க்கும் கற்றுக் கொடுத்து டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உருவாகாமல் பார்த்துக் கொள்வேன். தற்பொழுது அரசு எடுத்து வரும் அனைத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கும் நான் முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என்று உளமாற உறுதி மொழி கூறுகிறேன்” என அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இம்முகாமில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்  தி.வசந்தி   அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் முனைவர். ாவுக்கரசு   இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.செல்வராஜ்   துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)  சண்முகசுந்தரம்   மாவட்ட உணவுப்பாதுகாப்பு அலுவலர் மரு.சுகுணா   மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.மாரியப்பன்   செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல்   மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து