முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி வனச்சரகத்தில் சந்தன மரங்களை வெட்டி கடத்திய கேரளாவைச் சேர்ந்த 3 பேர் கைது

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல்,- பழனி வனச்சரக பகுதியில் சந்தன மரங்களை வெட்டி கடத்தி வந்த கேரளாவைச் சேர்ந்த 3 பேர்களை வனத்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.
பழனி வனச்சரக அலுவலர் கணேஷ் ராம் தலைமையில் பாப்பம்பட்டி பிரிவு வனவர் பழனிச்சாமி மற்றும் பழனி வனச்சரக பணியாளர்களைக் கொண்ட குழுவினர் கொடைக்கானல் வனக்கோட்டம் பழனி வனச்சரகத்தைச் சேர்ந்த பெரியம்மாபட்டி பீட் சட்டப்பாறை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கேரள மாநிலம் பாலக்காடு கண்ணகி நகர் முத்தந்தாரா பகுதியைச் சேர்ந்த குட்டன்(53), மலப்புரம் மாவட்டம் ஏரநாடு தாலுகா எடக்கரையைச் சேர்ந்த ரியாஸ்(41), ஞீக்கோட்டூர் நெட்டத்துக் கரும்பி பகுதியை சேர்ந்த ஹனீபா(42) ஆகிய 3 பேரும் ஒரு காரில் வேகமாக வந்தனர். அவர்களை பழனி வனக்குழுவினர் மறித்து சோதனையிட்டனர். அவர்கள்வந்த காரில் சந்தன மரத்துண்டுகள் வெட்டி மறைத்து கொண்டு வப்பட்டு இருந்தது. அதன் மொத்த எடை 21.250 கிலோ ஆகும். இதன் மதிப்பு சுமார் ரூ.54 ஆயிரம். வனத்துறையினர்  சந்தன மரங்களைக் கைப்பற்றி கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ.3 லட்சம் மதிப்பிலான காரையும் கைப்பற்றினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரையும் வனத்துறையினர் போலீசில் ஒப்படைத்ததையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து