இறைவனுக்கு அபிஷேகம் செய்யும் பொருட்களும் அதன் பயனும்!

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      ஆன்மிகம்
shivabhishek

Source: provided

நன்னீர் – தூய்ப்பிக்கும், நல்லெண்ணை – நலம் தரும், பச்சரிசி மா - மல நாசம், கடன் தீரும், மஞ்சள் தூள் - நல் நட்பு வாய்ப்பிக்கும், திருமஞ்சனத்தூள் - நோய் தீர்க்கும், பஞ்சகவ்யம் - தீதளிக்கும், ஆன்மசுத்தி (பசுவின் பால், தயிர், நீர், சாணம், நெய் கலந்தது),

பசும்பால் - நீண்ட ஆயுள் தரும், பசுந்தயிர் – மகப்பேறு வாய்க்கும், பஞ்சா மிருதம் - பலம், வெற்றி தரும், தேன் - சுகமளிக்கும், சங்கீதவிருத்தி, நெய் - முக்தியளிக்கும், சர்க்கரை – எதிரியை ஜெயிக்கும், இளநீர் – நல் சந்ததியளிக் கும், கருப்பஞ்சாறு – ஆரோக்கியமளிக்கும், நார்த்தம்பழம் - சந்ததி வாய்க்கும், சாத்துக்குடி – துயர் துடைக்கும், எலுமிச்சை – யமபய நாசம், நட்புடை சுற்றம், திராறஷ - திடசரீரம் அளிக்கும், வாழைப்பழம் - பயிர் செழிக்கும், மாம்பழம் - செல்வம், வெற்றி தரும், பலாப்பழம் - மங்கலம் தரும், யோகசித்தி, மாதுளை – பகை நீக்கும், கோபம் தவிர்க்கும், தேங்காய்த்துருவல் - அரசுரிமை, திருநீறு – சகல நன்மையும் தரும், அன்னம் - அரசுரிமை, சந்தனம் - சுகம், பெருமை சேர்க்கும், பன்னீர் – சருமம் காக்கும், கும்பஜலம் - பிறவிப்பயன் அளிக்கும், சங்காபிஷேகம் - நலமெலாமளிக்கும்.

பணம்! பணம்!! பணம்!!!

அமாவாசை, வியதீபாதம் தினம் நம் முன்னோர்கள் இறந்த திதி இவைகளில் தானம் செய்திட பணம் வரும். திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும். ஆப்ரஹாம் லிங்கன் படத்தை பார்த்து வர பணம் வரும். வியாழக்கிழமை மாலை 4ரூ5 குபேரகாலம். இந்நேரத்தில் இல்லத்தில் குபேரனை வழிபட்டு வர பணம் வரும். செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக் கிழமை தொடர்ந்து வழிபட பணம் வரும். ஸ்ரீரங்கம் தாயாரை வழிபட பணம் வரும். கனகதாரா தோத்திரம் ஸ்ரீசூக்தம் படிக்க பணம் வரும். அவரவர் நட்சத்திர மூலிகையை பணப்பெட்டியில் வைக்க பணம் வரும். ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளைக் குதிரையை அடிக்கடி பார்த்து வர பணம் வரும். அவரவர் குல தெய்வத்தை தினந்தோறும் காலையில் பிரார்த்திக்க பணம் வரும். பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும். தினசரி அபிஜித் நேரத்தில் மதியம் 11.00 -12.00 அவரவர் ஜென்ம நட்சத்திர அதிதேவதையை வணங்கிட பணம் வரும்.

 

வலம்புரிச்சங்கின் மகிமைகள்…!

வலம்புரிச்சங்கு மஹாலட்சுமிக்கு உரியது…! வலம்புரிச்சங்கு இருக்குமிடம் மஹாலட்சுமியின் இருப்பிடமாக கருத்தப்படுகின்றது…! இல்லத்தில் இதனை வைத்து வழிபட்டால் வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும் குடும்பத்தில் மன அமைதி, மகிழ்ச்சி நிலவும் என்பது ஐதீகம்…!

வியாபார ஸ்தலங்களில் இச்சங்கினை வைத்து வழிபட்டால் தொழில் மேன்மை அடையும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். வலம்புரிச்சங்கில் தீர்த்தம் நிரப்பி அதில் துளசி இலை இட்டு அந்த தீர்த்தத்தை வெள்ளிக்கிழமை களில் இல்லத்தில் தெளித்தால் வாஸ்து தோஷம் நீங்கும்.

செவ்வாய்தோஷம் உள்ள பெண்கள் செவ்வாய்கிழமைகளில் இந்த சங்கில் பால் நிரப்பி செவ்வாய் கிரக பூஜை செய்தால் தோஷம் நீங்கி திருமணம் நடக்கும். கடன் பிரச்சனையில் இருப்பவர்கள் சங்குக்கு குங்கும அர்ச்சனை செய்தால் கடன் விலகும்.

தெய்வத்திற்கு வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்தால் பத்து மடங்கு பலன் கிடைக்கும். வலம்புரிச்சங்கை முறைப்படி இல்லத்தில் வைத்து பூஜித்து வந்தால் செல்வச் செழிப்பு ஏற்படும். பில்லி சூன்யம், திருஷ்டி, தீயசக்திகள் எதுவும் அண்டாது.

புத்திரகாரகனான குருவுக்கு பஞ்சமி திதியன்று வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து பூஜித்தால் பிள்ளை இல்லாத தம்பதியர்க்கு பிள்ளை பிறக்கும்.

California fire looks like hell on earth | கலிபோர்னியா தீ விபத்து காட்சிகள்

Easy, Simple Rangoli Designs for Beginners | 7 Beautiful Rangoli design for festivals | LGArts - 2

Great Dane Dog | வேட்டைக்காக வளர்க்கும் கிரேட்டேண் நாய் வளர்ப்பு முறைகள் | Great Dane Dog in Tamil

சுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways

Easy 30 minutes Milk kova recipe in Tamil | Milk kova seivathu eppadi | Paalkova recipe in Tamil

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து