செங்கம் அருகே இளம் பெண் கொலையில் டிஎஸ்பி தலைமையிலான தனிப்படை 24மணிநேரத்தில் கொலையாளியை பிடித்தது

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      திருவண்ணாமலை

செங்கம் அடுத்த விண்ணவனூர் கிராமத்தை சேர்ந்த ரவி மகள் சங்கீதா இவர் விண்ணவனூர் ஓடை அருகே கொடுரமான முறையில் கொலைசெய்யப்பட்டு கிடந்தார் இதுகுறித்து திருவண்ணாமலை எஸ்பி பொன்னி உத்திரவின் பேரில் செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் செங்கம் கர்ணன் மேல்செங்கம் பூபதி சப் இன்ஸ்பெக்டர்கள் முரளி முத்துகுமாரசாமி ஆகியோர் கொண்ட தனி படையினர் சங்கீதா மரணம் குறித்து விசாரணை நடத்தினர்

விசாரணை

அம்மாபாளையம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தவர்களிடம் போலிசார் சந்தேகத்தின் பேரில் போலிசார் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குபின் முரணான தகவலை தெரிவித்தார் இதையடுத்து போலிசார் அந்த நபரை ஸ்டேஷனுக்கு அழைத்துவந்து விசாரித்தனர் விசாரணையில் அவர் திருக்கோவிலுரை சேர்ந்த மாயவன் மகன் பிரபு(39) என்பதும் இறந்துபோன சங்கீதா பெங்களுரில் பூண்டு மண்டியில் வேலைசெய்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதும் தெரியவந்தது சில ஆண்டுகளுக்கு முன் சங்கீதாவின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சங்கீதா கணவரை விட்டு பிரபுவுடன் நான்காண்டுகலாக வாழ்ந்துவந்துள்ளார்

இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் தாய்வீட்டிற்கு வந்து அங்கேயே தங்கியுள்ளார் பிரபு கடந்த புதன்கிழமை விண்ணவனூர் வந்து சங்கீதாவிடம் பெங்களுர் போகலாம் என அழைத்துள்ளார் அதற்கு சங்கீதா மறுத்துள்ளார் பின்னர் மாலையில் ஆசைவார்த்தைகள் கூறி அப்பகுதியில் உள்ள ஒரு ஓடை பகுதிக்கு அழைத்துசென்றுள்ளார் அங்கு பிரபு ஆத்திரம் அடைந்து சங்கீதாவை துப்பட்டாவில் கழுத்தை இருக்கியும் பிலேடுகளால் வெட்டியும் கொலைசெய்தது விசாரணையில் தெரியவந்தது. பாட்சல் போலிசார் பிரபு மீது வழக்கு பதிவுசெய்து கைதுசெய்தனர். மேலும் 24மணி நேரத்திற்குள் கொலை குற்றவாளியை கண்டுபிடித்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையிலான தனிப்படை போலிசாருக்கு எஸ்பி பொன்னி பாராட்டு தெறிவித்துள்ளார்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து