டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து செந்துறை அரசு மருத்துவமனையில் கலெக்டர் க.லட்சுமி பிரியா நேரில் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      அரியலூர்
Ariyalur 2017 10 07

 

அரியலூர் மாவட்டம், செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட செந்துறை அரசு மருத்துவமனை மற்றும் குழுமூர் ஆரம்பர சுகாதாரநிலையத்தில் டெங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, நேற்று (06.10.2017) நேரில் ஆய்வு செய்தார்.

 கலெக்டர் ஆய்வு

 செந்துறை அரசு மருத்துவமனையில் தமிழக அரசு உத்தரவின்படி, 24 மணிநேர காய்ச்சல் சிறப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதை, நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள்.பின்னர், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்து, அதற்குன்டான சிகிச்சை முறைகளை சிறப்புடன் செய்து தர மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மேலும், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் காய்ச்சல் மற்றும் டெங்கு தொடர்பான நோய்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து சிகிச்சை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். இதனைத்தொடர்ந்து, செந்துறை ஒன்றியம், குழுமூர் ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் , ஆரம்ப சுகாதார நிலையங்களில் பொதுமக்கள் தினமும் வந்து செல்ல வேண்டி இருப்பதால், மருத்துவமனை வளாகம் தூய்மையாக பராமரித்திட வேண்டும்.

  பொதுமக்களுக்கு தினசரி நிலவேம்பு கசாயம், உப்புகரைசல் வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்கள். மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து செல்லும் நோயாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம் மருத்துவர்கள், பணியாளர்கள், செவிலியர்கள் ஆகியோர் டெங்கு காய்ச்சல் தொடர்பாக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி, டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தக்கூடிய ஏ.டி.எஸ் கொசுகளை உருவாக்கிடாமல் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை தூய்மையாகவும், சுத்தமாகவும் பராமரித்திட அறிவுறுத்த வேண்டும் என இவ்வாய்வின்,போது மாவட்ட கலெக்டர் க.லட்சுமி பிரியா, தெரிவித்தார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து