இளைய சமுதாயத்தினர் வனத்தின் அருமை, பெருமைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்: கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே பேச்சு

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      சேலம்
3

சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று (06.10.2017) நடைபெற்ற வன உயிரின வார விழாவில் கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார். இவ்விழாவில் கலெக்டர் பேசியதாவது.

கலெக்டர் பேச்சு

தமிழ்நாட்டில் வனப்பகுதியில் சுமார் 22,877 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. இது தமிழ்நாட்டில் புவி பரப்பளவில் 17.59 சதவீதமாகவும். தேசிய வனக்கொள்கை 1988ன் படி மாநில ஒன்றில் புவி பரப்பளவில் 33.33 சதவீதம் வனங்களாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மதிப்பு மிக்க மரங்களான சந்தனம், தேக்கு, கருங்காலி மரம் மற்றும் காட்டு விலங்குகளான புலி, யாளை, சோலை மந்தி (சிங்கவால் குரங்கு), சாம்பல் நிற அணில் மற்றும் அரிய வகை உட்பிரதேசத்திற்குரிய விலங்கினங்கள் மற்றும் முக்கிய மருத்துவ தாவரங்கள் ஆகியவகைளில் வாழ்விடமாக வனங்கள் அமைந்துள்ளன. இந்திய துணைக்கண்டத்தில் மொத்தம் உள்ள பூக்கும் தாவரங்கள் 17,672 ஆகும். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5,640 உள்ளன. இது இந்திய அளவில் மிக அதிகமாக பூக்கும் தாவரங்கள் உள்ள மாநிலமாகும்.

இந்தியாவில் உள்ள 1022 பூக்காத தாவரவகைகளில் தமிழகத்தில் மட்டும் 184 வகைகள் உள்ளன. தெளிந்த நீரில் வாழும் மீன் இனங்கள் 165 நீர் மற்றும் நிலத்தில் வாழும் உயிரினங்கள் 76, ஊர்வன உயிரினங்கள் 177, பறவையினங்கள் 484, பாலூட்டிகள் 187 இவையனைத்தும் தமிழகத்தில் வாழும் உயிரினங்களாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் வனத்தை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். வனத்தினை போற்றி பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டு வன உயிரின வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வன வனத்தினை பெருமையினையும், அதனை போற்றி பாதுகாப்பது குறித்து எடுத்து உரைக்கும் வகையில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, அறிவுத்திறன் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இளைய சமுதாயத்தினர் வனத்தின் அருமை, பெருமைகளை தெரிந்து வைத்திருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இவ்வாறு கலெக்டர் ரோஹிணி ரா.பாஜிபாகரே, தெரிவித்தார். இவ்விழாவில் மாவட்ட வன அலுவலர் ஆ.பெரியசாமி, கோட்ட வன அலுவலர் க.ராஜாங்கம், உதவி வனப்பாதுகாவர்கள் செ.பிரபா, சி.குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Seema Raja - Movie Review | Sivakarthikeyan | Samantha | keerthy suresh

Seema Raja | Public Review Opinion | சீமராஜா திரைப்படம் ரசிகர்கள் கருத்து

Kozhukattai Recipe in Tamil | Modak Kolukattai Recipe in Tamil | Pooranam Recipe | Sweet Kolukattai

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து