முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புகுஷிமா அணு உலை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

டோக்கியோ: ஜப்பானின் புகுஷிமா அணுஉலைக்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. ஜப்பானின்  புகுஷிமா அணுஉலை அருகே சந்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. கிழக்கு இவாகியின் ஹான்ஷூவில் கடலுக்கு அடியில் 48 மைல் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இந்த நிலநடுக்கம் 6.3ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து உடனடியான எந்தத் தகவலும் இல்லை. கடந்த 2011ம் ஆண்டு  புகுஷிமா அணுஉலையை சக்தி வாய்ந்த அளவான 9 புள்ளியாக நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் அணுஉலை மிகுந்த பாதிப்பிற்கு ஆளானது. இதனால் கதிர்வீச்சு அபாயமும் இருந்தது. அதே போன்று இப்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தாலும் பாதிப்பு இருக்குமா என்று மக்கள் பீதியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து