முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவில் லெவல் கிராசிங்கில் சிக்கிய பேருந்து மீது ரயில் மோதியது: 19 பேர் பலி

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

உஸ்பெகிஸ்தான்: ரஷ்ய தலைநகர் மாஸ்கோ அருகே லெவல் கிராசிங்கில் பேருந்து ஒன்று சிக்கியது, அப்போது அங்கு வந்த ரயில் பேருந்து மீது பயங்கரமாக மோதியதில் 19 பேர் பலியாகியுள்ளதாக உஸ்பெகிஸ்தான் அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 5 பேர் காயமடைந்ததாக ரஷ்ய விசாரணைக் கமிட்டி தெரிவித்துள்ளது.

பேருந்தில் பயணம் செய்த 56 பேரும் உஸ்பெகிஸ்தான் நாட்டவர்கள் என்றும் பேருந்தில் சென்றவர்கள் அனைவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்றும் உஸ்பெகிஸ்தான் அயலுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

லெவல் கிராசிங்கை கடக்கும் போது பேருந்து பழுதடைந்து நின்றதாகவும் அப்போது அந்தப் பாதையில் ரயில் வந்ததாகவும் ரயில் ஓட்டுநர் பிரேக் போட முயற்சி செய்தும் முடியாமல் போக பேருந்து மீது பயங்கரமாக மோதியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து