இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இணைந்து தீவிரவாதத்துக்கு எதிராக செயல்பட முடிவு

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      இந்தியா
india iroppa 2017 10 07

புதுடெல்லி: தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்பட இந்தியாவும் ஐரோப் பிய ஒன்றியமும் முடிவு செய்துள்ளன.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் டொனால்டு பிரான்சிஸ்ஜக் டஸ்க், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜுன் கிளாடி ஜங்கர் ஆகியோர் அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளனர். அவர்கள் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது ரோஹிங்கியா அகதிகள் விவகாரம், வடகொரியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து செயல்பட ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்தியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.
பிரதமர் மோடி

பிரதமர் மோடியும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர். பிரதமர் மோடி கூறியபோது, பாதுகாப்பு, தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம் என்றார்.


ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் கூறியபோது, ஆன்லைன் மூலமாக தீவிரவாத அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பதை தடுப்பது, ஆயுத விநியோகத்தை தடுத்து நிறுத்துவது ஆகியவற்றில் இந்தியாவுடன் இணைந்து செயல் படுவோம் என்றனர்.

இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை அமல் படுத்த நீண்டகாலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் இதுவரை முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து