முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் நாசா அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ் தகவல்

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: பலவருடங்களுக்குப் பின் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது நாசா. நேற்று அந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார் அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ்.

நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் இன்னும் இரண்டு வருடங்களுக்குள் மீண்டும் நிலவுக்கு மனிதர்கள் அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். நிலவுக்கு ரஷ்யா ஸ்புட்னிக் என்ற நாய் ஒன்றை அனுப்பி வெற்றிகரமாக திரும்பக் கொண்டு வந்தது. இதற்கு போட்டியாக அமெரிக்காவின் விண்வெளித் துறையான நாசா மனிதர்களை அனுப்பும் முயற்சியை கையில் எடுத்தது.

நிலவில் அமெரிக்க கொடி பெரும் முயற்சிகளுக்கும், பல தோல்விகளுக்கும் அடுத்து 1969 ம் ஆண்டு ஜூலை மாதம் 20 தேதி வெற்றிகரமாக மனிதர்களை அனுப்பி , அங்கு அமெரிக்க கொடியை நட்டது. உலக வரலாற்றில் இது இன்னமும் பெரிய மைல் கல்லாக உள்ளது. நீல் ஆம்ஸ்ட்ராங் பெயர் சரித்திரத்தில் இடம் பிடித்தது.

இந்தத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அமெரிக்க துணை அதிபர் மார்க் பென்ஸ் " நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நாம் கையில் எடுத்துள்ளோம். இந்த முறை வெறும் கொடியை மட்டும் நட்டுவிட்டு வரும் பயணமாக இது இருக்காது. இனி நடக்கப் போகும் அனைத்து வானியல் ஆராய்ச்சிக்கும் இதுதான் தொடக்கப் புள்ளியாக இருக்கப் போகிறது '' என்று கூறினார்.

செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப திட்டமிட்டிருக்கும் நாசா , அதற்கு முன்னூட்டமாக இந்த நிலவுப் பயணத்தை திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளது. இந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்தவுடன் செவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் வேலை ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளது நாசா நிறுவனம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து