முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமந்தா-நாகசைதன்யா திருமணம்: இந்து முறைப்படி நடந்தது

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை, கோவாவில் நேற்றுமுன்தீனம் நள்ளிரவில் நடிகை சமந்தா-நடிகர் நாக சைதன்யா திருமணம் இந்து முறைப்படி நடைபெற்றது.

தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவ் பேரனும், முன்னணி நடிகர் நாகார்ஜூனாவின் மகனும், இளம் நடிகருமான நாக சைதன்யாவும், சென்னையை சேர்ந்த நடிகை சமந்தாவும் காதலித்து வந்தனர். சமந்த தமிழ் சினிமாவில் சிறிய சிறிய வேடங்களில் நடித்து வந்தார். பின்னர் தெலுங்கில் முன்னணி நடிகை ஆனார்.

இருவரும் தமிழில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் காதலுக்கு குடும்பத்தினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அதை மீறி இருவரும் லிவ்விங் டுகெதராக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இதனால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று கோவாவில் உள்ள டபிள்யூ என்ற 7 நட்சத்திர ஓட்டலில் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது. நள்ளிரவு 11.52 மணிக்கு சமந்தா கழுத்தில் நாக சைதன்யா தாலி கட்டினார். திருமணத்துக்கு முன்பும் பின்பும் ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டமாக இருந்தது. திருமணத்துக்காக ஓட்டல் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. உறவினர்கள் 2 தனி விமானத்தில் கோவா சென்றிருந்தனர். நாக சைதன்யா, சமந்தா ஆகியோரின் குடும்பங்களை சேர்ந்த 150 பேர் மட்டுமே திருமணத்துக்கு வந்திருந்தனர்.

நடிகர், நடிகைகள், அரசியல் பிரமுகர்கள் யாரும் திருமணத்துக்கு அழைக்கப்படவில்லை. பாடகி சின்மயி, அவரது கணவரும் நடிகருமான ராகுல் ஆகியோர் திருமணத்தில் பங்கேற்றனர். நேற்றுமுன்தீனம் மாலை 3 மணிக்கு மருதாணி சடங்குகள் நடைபெற்றன. நாக சைதன்யாவின் பாட்டி ராஜேஸ்வரி புடவையை நவீன வேலைபாடுகளுடன் புதுப்பித்து திருமண புடவையாக சமந்தா அணிந்திருந்தார். சமந்தா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இன்று மாலை கோவாவில் உள்ள தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடக்கிறது. அதன் பிறகு மீண்டும் ஓட்டலில் விருந்து நடைபெறுகிறது. அடுத்தவாரம் ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமணம் செய்து கொண்ட சமந்தா–நாக சைதன்யாவுக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து