மதுபோதையில் விபத்து: நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் ரத்து

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      சினிமா
actor-jai 2017 10 07

சென்னை, மதுபோதையில் விபத்து ஏற்படுத்திய வழக்கில் நடிகர் ஜெய்யின் ஓட்டுநர் உரிமம் 6 மாதம் ரத்து செய்யப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய் சில தினங்களுக்கு மது அருந்திவிட்டு காரை ஓட்டி விபத்தில் சிக்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து போலீசார் காருக்குள் மயங்கி கிடந்த நடிகர் ஜெய்யை எழுப்பி நடத்திய விசாரணையில், ஜெய் போதையில் காரை ஓட்டியது தெரியவந்தது. இதையடுத்து ஜெய் மீது குடிபோதையில் அதிவேகமாக காரை ஓட்டி விபத்தை ஏற்படுதியதாக வழக்குப்பதிவு செய்யப்படு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு ஜெய் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மேலும் 2 நாட்களில் நடிகர் ஜெய்யை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து நடிகர் ஜெய் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதையடுத்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட ஜெய்யிடம் திரைப்படத்தில் வருவது போலவே வாழ்க்கையையும் நினைத்துவிடாதீர்கள் என்று சைதாப்பேட்டை நீதிபதி ஆபிரகாம் லிங்கன் அறிவுரை வழங்கினார். மேலும் தன் மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ஜெய் ஒத்துக் கொண்டதால் ஜெய்யின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி, ரூ.5200 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து