முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலெக்டர் வெங்கடாசலம், தலைமையில் பேரிடர் மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      தேனி
Image Unavailable

தேனி.-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கம் மற்றும் வளாகத்தில் ஸ்ரீசத்ய சாயி சேவை நிறுவனத்தின் சார்பில் பேரிடர் மேலாண்மை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் இயற்கை இடர்பாடு ஏற்படும் காலங்களில் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பாது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று (07.10.2017)   கலெக்டர் ந.வெங்கடாசலம்,   தலைமையில் நடைபெற்றது.
 இப்பயிற்சி வகுப்பில்   கலெக்டர்அவர்கள் தெரிவிக்கையில், பேரிடர் மேலாண்;மை என்பது  இயற்கை சீற்றத்தின் காரணமாக எதிர்பாராத புயல், மழை, வெள்ளம், பூகம்பம், நிலச்சரிவு போன்ற நிகழ்வின் போது பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக கண்காணித்து அவர்களுக்கு தேவையான முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுவது ஆகும். பேரிடர் ஏற்படும் காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும். இயற்கை இடர்பாடுகளின் போது, பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுவது, ஆற்றாங்கரை மற்றும் கண்மாய், ஓடை பகுதிகளில் மழைக்காலங்களில் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள்,  ண மண்டபங்கள், பொது மக்கள் திரளாகக்கூடக்கூடிய கட்டடங்களில் பாதுகாப்பின் உறுதிதன்மையை உறுதிப்படுத்துவது, பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துவ வசதிகள் ஏற்படுத்திதருதல் போன்ற முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ளுவது பேரிடர் மேலாண்மையின் முக்கிய பணியாகும்.
மேலும், பேரிடர் மேலாண்மை குறித்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சிகள் மூலம் பேரிடர் காலங்களில் பொதுமக்களே எவ்வாறு பாதுகாத்து கொள்ளவது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்திட வேண்டும். இயற்கை இடர்பாடு என்பது நாம் எதிர்பார்க்கும் படியாக இருக்காது ஒரே மாதிரியான இடர்பாடுகள் ஏற்படும்  என்று எதிர்பார்க்கவும் முடியாது அல்லது இப்படித்தான் இயற்கை சீற்றம் ஏற்படும் என்றும் சொல்லவும் இயலாது எனவே, எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும். நமது மாவட்டம் மலைப்பிரதேசம் என்பதால் திடீர் வெள்ள பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.
எனவே, இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ள அலுவலர்கள் அளிக்கப்படுகின்ற பயிற்சியின் கருத்துக்களை நன்கு உட்குணர்ந்து இயற்கை சீற்றம் ஏற்படும் காலங்களில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி பொதுமக்களை பாதுகாத்திட வேண்டும் என   கலெக்டர் ந.வெங்கடாசலம்,   தெரிவித்தார்.
 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர்  தி.செ.பொன்னம்மாள் துணை இயக்குநர் (சுகாதார நலப்பணிகள்) மரு.சண்முகசுந்தரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)  ஞானசேகரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  சந்திரசேகரன் வருவாய் கோட்டாட்சியர்கள்  கார்த்திகேயன்  தி.இரா.ஆனந்தி உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்)  சேதுராமன் மாவட்ட தீயணைப்பு அலுவலர்  கருப்பையா  தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)  தங்கவேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்  ரகுபதி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்  ச.தங்கவேல் மாவட்ட விளையாட்டு அலுவலர்  சுப்புராஜ் ஸ்ரீசத்ய சாயி சேவை நிறுவனத்தின் தேசிய பயிற்சியாளர்  சுரேஷ் மாநில பயிற்சியாளர்கள்  ராஜா  இருளப்பராஜா  பாஸ்கரன்  அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து