முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை - ராமேசுவரம் இடையே இரு வழி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்க ஏற்பாடு - அன்வர்ராஜா எம்.பி தகவல்.

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

பரமக்குடி.- சென்னை - ராமேசுவரம் இடையே இரு வழி பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை விரைவில் இயக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக பரமக்குடியில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா கூறினார்.
பரமக்குடி ரயில் நிலையத்தில் சுமார் ரூ 2 கோடி செலவில் நடந்து வரும் பிளாட்பார கூடுதல் மேற்கூரைகள் மற்றும் பிளாட்பாரங்கள் விஸ்தரிப்பு  பணியினை ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர்  அன்வர்ராஜா  ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது பிளாட்பாரங்களில் நடந்து வரும் கூடுதல் மேற்கூரைகள் மற்றும் பிளாட்பாரங்கள் விஸ்தரிப்பு பணிகளை பார்வையிட்டு ரயில்வே அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.பின்பு, ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கழிப்பறை வசதி ,குடிநீர் வசதி,வாகன நிறுத்துமிடம் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்டுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இரவு நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையம் மின்வசதி ஏற்பாடு செய்து தர வேண்டுமெனவும் , பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மதுரை - ராமேசுவரம் இடையே மூன்று முறை இரு வழித்தடங்களில் இயக்கப் படும் பயணிகள் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், சென்னை - ராமேசுவரம் இடையே பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க வேண்டுமென ரயில் பயணிகள் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜாவிடம் கோரிக்கையாக முறையிட்டனர்.
பின்பு,  பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா நிருபர்களிடம் கூறியதாவது :-
பரமக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பிளாட்பாரங்களில் கூடுதல் மேற்கூரைகள் மற்றும் பிளாட்பாரங்கள் விஸ்தரிப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.இப் பணி முடிந்தவுடன் ராமநாதபுரம் ரயில் நிலையத்திலும் இதுபோன்ற பணிகள் நடைபெற உள்ளன. இப்பணிகள் முடிந்தவுடன் ராமேசுவரம் -,அயோத்தி எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் வட மாநில எக்ஸ்பிரஸ் ரயில்கள் இரு வழித் தடத்திலும் ராமநாதபுரம், பரமக்குடி ரயில் நிலையங்களில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
மேலும் பரமக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக ஜின்டெக்ஸ் கூடுதலாக அமைத்து அதன்மூலம் குடிநீர் முறையாக கிடைக்கவும், கழிப்பரை வசதி முறையாக செயல்படவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.தொடர்ந்து தினசரி மூன்று முறை இயக்கப் படும் மதுரை - ராமேசுவரம் பயணிகள் ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதல் பயணிகள் பெட்டிகள் ஓரிரு நாட்களில் இணைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
அத்துடன், பரமக்குடி , முதுகுளத்தூர்,கடலாடி,கமுதி, சிவகெங்கை மாவட்டம் இளையாங்குடி தாலுகா பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடையும் வகையில் சென்னை - ராமேசுவரம் இடையே இருவழிப் பாதையில் பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
பரமக்குடி ரயில் நிலையத்திற்கு இரவு நேரங்களில் வந்து செல்லும் பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையத்தின் முன்பகுதியில் உயர் கோபுர மின்விளக்கு  (ஹைமாஸ் ) பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் அமைக்கப் படும்.
உப்பூரில் 1600 மெகாவாட் அனல் மின்நிலையம், கடலாடியில் 4000 மெகாவாட் அனல் மின்நிலையம் விரைவில் அமைக்கப் படவுள்ளதால் கடந்த 1910 ம்ஆண்டு எழுப்பப்பட்ட  ராமநாதபுரம் வழியாக காரைக்குடி - தூத்துக்குடி இடையேயான புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுப்பப் பட்டு வலியுறுத்தப் பட்டுள்ளது.
மதுரை -ராமநாதபுரம் இடையே நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி முதல் கட்டமாக நடந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் - பாம்பன் வரை நடைபெற உள்ளது.பின்பு சுற்றுலா தளம் மற்றும் புன்னியஸ்தலமான ராமேசுவரத்தை இணைக்கும் வகையில் பாம்பன் கடல் பகுதியில் ரூ 952 கோடி செலவில் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய கடல்மேல் சாலை அமைக்க மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது என்றார்.
முன்னதாக பரமக்குடி ரயில்வே நிலைய கண்காணிப்பாளர் சுப்பிரமணியம் பாராளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜாவிற்கு சால்வை அணிவித்து வரவேற்றார்.பேட்டியின் போது தென்னக ரயில்வே மதுரை பொறியாளர் சண்முகவேலு மற்றும் அலுவலர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் ஜமால் முகம்மது, நாகராஜன்,அப்துல்மாலிக் உள்பட பலர் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து