முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் உடையில் மிரட்ட வரும் பரத்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

Source: provided

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் பரத், முதல் முறையாக புதிய படம் மூலம் போலீஸ் உடை அணிய இருக்கிறார்.  லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது.

இப்படத்தில் முன்னணி நடிகரான பரத், சுரேஷ் மேனன், ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் நடிக்கிறார்கள். படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் ஸ்ரீசெந்தில்.

இவர் நாளைய இயக்குநர் சீசன் இறுதிபோட்டி வரை முன்னேறியவர் என்பதும், இவருடைய சக போட்டியாயராக கலந்துகொண்டவர்கள் ‘ரெமோ’ இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ஒளிப்பதிவை கவனிக்கிறார் சுரேஷ் பாலா. இவர் பிரபல ஒளிப்பதிவாளர்களான வேல்ராஜ் மற்றும் பாலசுப்ரமணியெம் ஆகியோர்களிடம் உதவியாளராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

படத்தைப் பற்றி அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசும் போது, ‘சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பரத் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார்.

அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம்.

இப்படத்தின் படபிடிப்பு விஜயதசமியான இன்று முதல் தொடங்குகிறது.’ என்றார். ‘இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவை தீபாவளியன்று வெளியிடப்படும்’ என்று தயாரிப்பாளர்களில் ஒருவரான M.S.சிவநேசன் தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து