முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புத்தகம் வெளியிடுகிறார் டிரம்ப்பின் முதல் மனைவி

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் மனைவியான இவானா டிரம்ப் ''ரெய்சிங் டிரம்ப்'' என்ற புத்தகம் வெளியிடவுள்ளார். இந்தப் புத்தகம் வெளியாகும் முன்பே அமெரிக்காவில் மிகவும் வைரல் ஆகியுள்ளது. இந்தப் புத்தகத்தில் இவனா டிரம்ப், தனது திருமண வாழ்க்கைக் குறித்தும், அமெரிக்க அதிபர் டிரம்பின் நடத்தைகள் குறித்தும் எழுதியுள்ளதால் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் முன்னாள் மனைவி இவானா டிரம்ப் ஆவார். சில வருடங்களுக்கு முன்பு டிரம்பிற்கும் இவருக்கும் விவாகரத்து ஏற்பட்டது. டிரம்ப் அதிபர் ஆவதற்கு முன்பே மிகவும் பிரபலமான நபராக இருந்ததால் இந்தச் சம்பவம் வைரல் ஆனது. மிகவும் புயலைக் கிளப்பிய இந்தச் சம்பவம் அமெரிக்கவின் அப்போதைய தலைப்புச் செய்தியானது .

இதையடுத்து அமெரிக்க அதிபர் டிரம்ப் , மெலினா என்ற பெண்ணுடன் வாழத்தொடங்கினார் . தற்போது அதிபரின் முன்னாள் மனைவியான இவானா டிரம்ப் தனது திருமண வாழ்க்கை குறித்து புத்தகம் எழுதவுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் குறித்து இந்தப் புத்தகத்தில் நிறைய தகவல்கள் எழுதப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் உடன் இவானா வாழ்ந்த வாழ்க்கை பற்றி இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டு இருப்பதால் இந்த புத்தகத்திற்கு " ரெய்சிங் டிரம்ப் '' என பெயர் வைத்துள்ளார் இவானா டிரம்ப். மேலும் அவர் இந்தப் புத்தகத்தில் " டிரம்ப் என்னை அடிமை போல் நடத்தினார். ராணுவ அதிகாரி போல் அவர் என்னிடம் செயல்பட்டார்'' என்றெல்லாம் எழுதியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மோசமான சில பழக்க வழக்கங்கள் , அவருக்கும் மற்ற பெண்களுக்கும் இடையேயான தொடர்பு என பல விஷயங்களை அவர் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். வெளியாவதற்கு முன்பே இந்தப் புத்தகம் அமெரிக்காவில் வைரல் ஆகத் தொடங்கியுள்ளது. இந்தப் புத்தகம் அடுத்த வாரம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து