முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமெரிக்காவை புரட்டி எடுத்த புயல் மிஸிசிப்பியில் 2 முறை நிலச்சரிவு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

நியூ ஆர்லியன்ஸ் : அமெரிக்காவில் மிஸிசிப்பி அருகே நேட் புயல் மையம் கொண்டுள்ளதால் கனமழை பெய்து  நிலச்சரிவு ஏற்பட்டது. மத்திய அமெரிக்காவில் நேட் புயல் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை தாக்கியது. இதனால் கனமழைக்கு 31 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் பலரை காணவில்லை.

இதனால் மத்திய அமெரிக்க பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளித்தன. இந்த புயல் மிஸிசிப்பி கடற்கரையோரம் மையம் கொண்டதால் கனமழை கொட்டித் தீர்த்தது. இம்மழையால் நேற்று நிலச்சரிவு ஏற்பட்டது.
லூசியானா, மிஸிசிப்பி, அலாபாமா, ப்ளோரிடா உள்ளிட்ட பகுதிகளில் கடல் அலைகள் உயரமாக வீசக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு அப்பகுதி மக்கள் வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது.

இந்த புயலானது மிஸிசிப்பி பகுதியில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இதனால் நிகாராகுவா, கோஸ்டா ரிக்கா, ஹோண்டுராவில் 25 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த நேட் புயலானது அமெரிக்காவின் தெற்கு பகுதி நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது. அமெரிக்காவின் முக்கிய பகுதிகளை புரட்டிபோட்ட மரியா மற்றும் இர்மா புயல் அளவுக்கு வலுவானது இல்லை என்றால் இது வேகமாக நகர்ந்து வருவதால் தாழ்வான இடங்களில் வெள்ளநீர் சூழும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நேட் புயலினால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தினரும், மீட்புக் குழுவினரும் தயார் நிலையில் இருக்குமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியுள்ளார். மேலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த அடைமழையால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டனர். ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. பாலங்கள் சேதமடைந்து சாலைகள் ஆறுகளாக காட்சியளிக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து