திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவில் தமிழ் சேவை தொடக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      ஆன்மிகம்
tirupati-balaji-temple 2017 10 8 0

திருமலை :  திருப்பதி தேவஸ்தான இணையதளம் விரைவில் தமிழ், கன்னடம், இந்தி என 3 மொழிகளில் சேவையைத் தொடங்க உள்ளதாக தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்சிங்கால் தெரிவித்துள்ளார்.

புரட்டாசி மாதத்தையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டத்தை பயன்படுத்தி முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்சிங்கால், முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் விரைவில் திருப்பதி தேவஸ்தான இணையதளம் தமிழ், கன்னடம், இந்தி என 3 மொழிகளில் சேவையைத் தொடங்க உள்ளதாகவும் அவர் கூறினார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து