முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வான்படையின் 85-வது ஆண்டு தினம் அனுசரிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இந்திய வான்படையின் 85 வது விமானப்படைதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்திய வான்படையானது 1932 ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சி காலத்தில் இந்திய ராயல் ஏர் போர்ஸ் என்னும் பெயரில் உருவாக்கப்பட்டது.

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய விமானப்படை இந்தியாவின் சொந்த நிர்வாகத்திறனில் கொண்டு வரப்பட்டது . 1950 முதல் இந்தியன் ராயல் ஏர் இந்தியா  போர்ஸ் என்ற பெயர் மாற்றம் பெற்று இந்தியன் ஏர் போர்ஸ் என்றானது .

இந்தியாவின் வான்வழி எல்லைக்குட்ப்பட்ட பகுதியை பாதுகாத்தல் மற்றும் போர் வரும்போது எதிரிகளிடமிருந்து நாட்டைக்காத்தல் மற்றும் ஐ.நா.வின் அமைதியை நிலைநாட்டும் படையாக இருப்பது இதன் வேலையாகும் . மேலும் அமைதி காத்தல் பிரிவு, காங்கோ ,சோமாலையா போன்ற நாடுகளை காக்கும் பணியை செய்து வந்துள்ளது .

இந்தியாவின் பாதுகாப்பு படைகளான இந்திய ராணுவம், கடற்படை, ஏர் போர்ஸ் இவைகள் அனைத்துக்கும் தனித்தனி பெருமைகள் உள்ளன .  இந்தியன் இராணுவத்தில் பணியாற்றுவது மிகபெருமை வாய்ந்த ஒன்றாகும் . இந்திய விமானப்படையின் மந்திர சொல்லான "டச் த ஸ்கை வித் குளோரி "என்ற குறிக்கோள் கொண்டது . பெருமையுடன் வானைத் தொடுதல் என்ற வாசகம் கொண்டு விண்ணில் பறக்கின்றது .

இந்திய வான்ப்படையின் சாதனையாக குழுவாக இணைந்து மலையேற்றுதல் வெற்றிகரமாக செய்துள்ளது . அத்துடன் இந்திய விமானப்படை சாகசங்கள் நிகழத்தி மக்களை பெருமிதப்படுத்துகிறது அத்துடன் மிக வலிமையான அதிக பலம் படைத்த ஒரு படையாக திறன் மிகு அமைப்பாக நாட்டை பெருமிதப்படுத்துகிறது . மேலும் அதி நவீன விமான இயக்கம் எந்த சூழலிலும் செயல்படும் வேகம் அனைத்தும் இந்தியன் ஏர் ஃபோர்ஸின் சாதனையாகளுள் ஒன்றாகும்.

உலகத்தின் மிகச்சிறிய விமானத்தில் சுற்றி 2007 பெருமிதப்படுத்தியது . கிளிமஞ்சாரோ மலையேற்றம் , பெண்கள் பிரிவு எவரெஸ்ட் மலையேற்றம் போன்ற 7 பிரிவு சப்மிட்களில் சாதித்துள்ளது . இந்திய வான்படையில் இணைய இளைஞர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இந்திய வான்படை தளம் கேரளாவில் உள்ளது . என்டிஏ எனப்படும் நேஷனல் டிபென்ஸ் தேர்வு எனப்படும் என்டிஏ தேர்வு எழுதினால் தரைப்படையிலும் வான்ப்படையில் இணைய யூபிஎஸ்சியால் நடத்தப்படும் தேர்வு எழுத வேண்டும் .

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து