முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருவில் சுட்டுக் கொல்லப்பட்ட கவுரி லங்கேஷுக்கு சர்வதேச விருது

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

பெங்களூரு : பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷுக்கு அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த ஒருவர் இவ்விருதை பெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பெங்களூருவை சேர்ந்த பத்திரிகையாளரும், சமூக செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ் (55) கடந்த செப்டம்பர் 5-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் லண்டனில் உள்ள ரீச் ஆல் வுமன் (ரா இன் வார்) என்கிற தொண்டு நிறுவனம் கவுரி லங்கேஷுக்கு 'அன்னா பொலிட்கோவ்ஸ்கயா' விருதை வழங்குகிறது. பெண்கள், குழந்தைகள், ஒடுக்கப்பட்டோர் உள்ளிட்டவற்றுக்காக போராடியதால், இவ்விருதை பாகிஸ்தான் சமூக செயற்பாட்டாளர் குலாலாய் இஸ்மாயில் உடன் கவுரி லங்கேஷுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கவுரி லங்கேஷின் சகோதரி கவிதா நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த 2006-ம் ஆண்டில் ரஷ்யாவில் கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் அன்னா பொலிட்கோவ்ஸ்கயா நினைவாக இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு இவ்விருது கவுரிக்கு வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரத்தில் விருதை பெறுவதற்கு அவர் இல்லாமல் போனது வருத்தத்தை தருகிறது. இதன் மூலம் யாருக்கும் அஞ்சாமல் மக்களுக்காக போராட வேண்டும் என்ற உணர்வு வந்திருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து