முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் தொடர்பாக நடைபெற்ற சிறப்பு முகாம் கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா.சவான் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      கன்னியாகுமரி
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ள, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  மேலும், இந்திய தேர்தல் ஆணையம், 18 வயது நிறைவடைந்த இளைய வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய இரு தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் மேற்கொள்ளுதல் ஆகியவற்றிற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.  நாகர்கோவில், வடசேரி, எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப்பள்ளி, புத்தேரி அரசு உயர்நிலைப்பள்ளி, இறச்சகுளம் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இறச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடிகளில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணிகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் ரா. சவான்  அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, தெரிவித்ததாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில்                அக்டோபர் 3-ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் படி, ஆண் வாக்காளர்கள்                 7,56,980, பெண் வாக்காளர்கள் 7,55,710, இதர வாக்காளர்கள் 151 என மொத்தம் 15,12,841 வாக்காளர்கள் உள்ளார்கள். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, 18 வயது நிறைவடைந்த இளைய வாக்காளர்களை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்பதற்காக இன்று சிறப்பு முகாம்கள், மாவட்டத்திலுள்ள 608 மையங்களில் 1,688 வாக்குசாவடிகளிலும் நடைபெற்றது. இந்த முகாமில், இளைய வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெறுவதற்காக, அனைத்து வாக்குச்சாவடிகளிலும், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளது.  புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக, தகுதியான வாக்காளர்கள்  குழுசுஆ - 6  ஐ பூர்த்தி செய்து, அத்துடன் இருப்பிடச் சான்று அடையாள அட்டை மற்றும் புகைப்படத்துடன்  சமர்பிக்க வேண்டும்எனவே, இளைய வாக்காளர்கள், நடைபெறும் இச்சிறப்பு முகாமில் கலந்து கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்த்துக்கொள்ள, விண்ணப்பங்கள் அளித்திட வேண்டுமென கலெக்டர் அவர்கள் தெரிவித்தார். பின்னர், கலெக்டர்  புத்தேரி, அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இறச்சகுளம் அரசு தொடக்கப்பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசு உள்ளதா என பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, நாகர்கோவில் வருவாய் கோட்டாச்சியர் இரா.ஜானகி, தோவாளை வட்டாட்சியர் பி. சாரதாமணி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் (பொ)                     ஆறுமுகநயினார், தேர்தல் தனி வட்டாச்சியர் சுப்பிரமணியன், துணை தேர்தல் வட்டாட்சியர்  ரவிச்சந்திரன்,  சேகர் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து