முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓசூர் நகராட்சியில், ரூ. 1 கோடியே 98 லட்சம் மதிப்பில் பூங்காக்கள், ஆரம்ப சுகாதார நிலைய கட்டிட கட்டுமான பணிகள்: அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      கிருஷ்ணகிரி
Image Unavailable

ஓசூர் நகராட்சியில் இன்று மட்டும் மொத்தம் ரூ. 2 கோடியே 48 லட்சத்து 50 மதிப்பில் புதிய திட்டப்பணிகள், முடிவுற்ற பணிகளை பொதுமக்களின் பயன் பாட்டிற்கு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி துவக்கி வைத்தார்.

 

கட்டுமான பணிகள்

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகராட்சியில், ரூ.1 கோடி 56 லட்சம் மதிப்பில் 4 - பூங்காக்கள் மற்றும் ரூ. 42 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலை கட்டிடம் என 5 பணிகள் என மொத்தம் ரூ. 1 கோடியே 98 லட்சம் மதிப்பில் கட்டுமான பணிகளை இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.

ஓசூர் நகராட்சியில் வார்டு எண் 13 அப்துல்கலாம் நகரில் ரூ. 35.50 லட்சம் மதிப்பிலும், வார்டு எண் 25 பிருந்தாவன் நகரில் ரூ. 43.50 லட்சம் மதிப்பிலும், வார்டு எண். 33 தளி அட்கோ பகுதியில் ரூ.32.50 லட்சம் மதிப்பிலும், வார்டு எண். 73 ராயக்கோட்டை அட்கோ பகுதியில் ரூ.44.50 லட்சம் மதிப்பில் என ரூ. 1 கோடியே 56 லட்சம் மதிப்பில் அம்ரூத் திட்டத்தின் கீழ் புதிய பூங்காக்கள் அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து சீதாராம் நகர் பகுதியில் ரூ. 42 லட்சம் ரூபாய் மதிப்பில் நகர் புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்திற்கு அமைச்சர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்து அப் பகுதி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, முன்னாள் தமிழக முதலமைச்சர் அம்மா அவர்களின் நல்லாசியுடன் பொதுமக்களின் குறைகள் சம்மந்தப்பட்ட துறைகள் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என பொதுமக்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆவலப்பள்ளி அட்கோ, பாகலுர் அட்கோ, தளி சாலை சிறுவர் பூங்கா, பகுதி 9 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பகுதி 10 தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், ஓசூர் பேருந்து நிலையம், மேற்கு பகுதி, கிழக்கு பகுதி ஆகிய இடங்களில் ரூ. 50 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஓசூர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன குடிநீர் சுத்திகரிப்பு மையங்களை ரூ. 2 - க்கு 10 லிட்டர் குடிநீர் வழங்கும் பணிகளை துவக்கி வைத்து அந்த பகுதி குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். தமிழக முதலமைச்சர் ஓசூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்துள்ளார்கள். அதனடிப்படையில் வரும் காலங்களில் நிறைய பணிகளை செய்வதற்கு தேவையான நிதி தமிழக அரசிடமிருந்து ஓசூர் நகராட்சிக்கு வரும். பொதுமக்களின் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும் என தெரிவித்தார்.

தொடர்ந்து ஆவலப்பள்ளி அட்கோ, வெங்கடேஸ்வரா லேஅவுட், சப்தகிரிநகர், பிருந்தாவன் நகர், நியூ ஏ.எஸ்.டி. அட்கோ, ஆகிய 5 - இடங்களில் ரூ. 2 கோடியே 7 லட்சம் மதிப்பில் பூங்காகள் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ள பூங்காகளை இளைநர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பா.பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டு மேலும் பூங்காககள் அமைந்துள்ள பகுதிகளை சுற்றியுள்ள பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து சாலைவசதி மற்றும் வீட்டுமனை பட்டாக்கள், பாரத பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் நகர பகுதியில் வசிக்கும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஓசூர் நகராட்சி ஆணையர் செந்தில் முருகன், தருமபுரி கூட்டுறவு ஒன்றிய தலைவர் நாராயணன், நகராட்சி பொறியாளர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் கண்ணன், நாராயணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், வாசு, ரமேஷ், சரஸ்வதி, அசோக்ரெட்டி, முரளி, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் முனியப்பன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் சோக்காடி ராஜன், கூட்டுறவு சங்க தலைவர்கள் தேவேந்திரன், பிரபாகர்ரெட்டி, ஜெயபிரகாஷ், பால்நாராயணன், வி.டி.ஜெயராமன், மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து