முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்கள்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- திருமங்கலம் தொகுதியில் புதிய வாக்காளர்களைச் சேர்ப்பதற்கென அனைத்துப் பள்ளி வாக்குச்சாவடிகளில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு வாக்காளர் சேர்ப்பு முகாம்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை   அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அக்டோபர் 8ம் தேதியான நேற்று   புதியவாக்காளர் சேர்த்தல்,பெயரை நீக்குதல்,திருத்தம் செய்தல் மற்றும் வாக்காளர் பட்டியலை சரிபார்த்திட தமிழகம் முழுவதிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.இதையொட்டி மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவிலுள்ள அனைத்துப் பள்ளி  வாக்குச்சாவடிகளிலும் நேற்று இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று நடத்தப்பட்ட இந்த வாக்காளர் சேர்ப்பு முகாம்களில் ஏராளமானோர் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கென விண்ணப்பங்களை வாக்குச்சாவடி அலுவலர்களிடம் கொடுத்தனர்.அதே போல் திருத்தம் செய்திட வேண்டியும் ஏராளமானோர் வாக்குச்சாவடிகளில் இதற்கென நியமிக்கப்பட்டிருந்த அலுவலர்களிடம் தங்களது மனுக்களை கொடுத்தார்கள்.
 இந்நிலையில் நேற்று காலை திருமங்கலம் தொகுதிக்கு  உட்பட்ட திருமங்கலம் நகரிலுள்ள தெற்குத்தெரு நகராட்சி ஆரம்பப்பள்ளி திருமங்கலம் ஒன்றியத்திலுள்ள ஆலம்பட்டியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,டி.கல்லுப்பட்டி ஒன்றியம் டி.குண்ணத்தூர் அரசு ஆரம்பப்பள்ளி,பேரையூர் பேரூராட்சி  அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கள்ளிக்குடி ஒன்றியம் கள்ளிக்குடி அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் நேற்று நடைபெற்ற வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்களை தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டார்.அப்போது ஒவ்வொரு வாக்காளர் சேர்ப்பு மையங்களில் உள்ள அலுவலர்களிடமும் வாக்காளர்களுக்கு உதவிடும் பணியிலிருந்த அ.தி.மு.க நிர்வாகிகளிடமும் வாக்காளர்கள் சேர்க்கை விபரங்கள் மற்றும் திருத்தப்படுவதற்காக கொடுக்கப்பட்டுள்ள விபரங்கள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டறிந்தார்.
அப்போது முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,முன்னாள் மாவட்ட செயலாளர் எம்.ஜெயராமன்,மதுரை புறநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர் வக்கீல் தமிழ்ச்செல்வம்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர்  திருப்பதி,முன்னாள் திருமங்கலம் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் நகர் கழகச் செயலாளர் ஜே.டி.விஜயன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றஇணைச் செயலாளர் ஆண்டிச்சாமி, கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,கல்லுப்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி,பேரூர் செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன்,திருமங்கலம் நகர அவைத்தலைவர் ஜஹாங்கீர்,முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர் சதீஸ்சண்முகம்,டி.கல்லுப்பட்டி முன்னாள் யூனியன் துணை சேர்மன் பாவடியான்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,கள்ளிக்குடி யூனியன் முன்னாள் துணை சேர்மன் கண்ணன்,முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரபுசங்கர்,திருமங்கலம்யூனியன் துணை செயலாளர் சுகுமார்,முன்னாள் உரப்பனூர் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன் மற்றும் கட்சி நிர்வாகிகள் வக்கீல்கள் பாஸ்கரன்,முத்துராஜா,வெங்கடேஸ்வரன், வாசிமலை, வில்லூர் சரவணன்,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,தங்கராஜ்,பிச்சைமணி,நாகலெட்சுமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
--

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து