3டியில் 2.0 : ஷங்கரை பாராட்டிய ரஜினி

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      சினிமா
rajini praise shankar 2017 10 8

சென்னை : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் 2.O படத்தின் 3டி மேக்கிங் வீடியோ நேற்று வெளியிடப்பட்டதையடுத்து, 3டி மேக்கிங்கிற்கு காரணமான ஷங்கரை ரஜினி பாராட்டியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ‘2.0’ பிரமாண்ட பொருட்செலவில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வருகிறது. பிரபல இந்தி நடிகர் அக்ஷய் குமார் வில்லனாக நடிக்கிறார். 3டி தொழில்நுட்பத்தில் எடுக்கப்படும் இப்படத்தின் உருவாக்க காட்சிகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் ரஜினி சிறப்பு கண்ணாடியை அணிந்து, தான் நடித்த காட்சிகளை பார்த்து ரசித்தார். இதுகுறித்து ரஜினி கூறுகையில், இயக்குனர் ஷங்கர் 3டி-யை மனதில் வைத்துதான் இந்த கதையை எழுதி இருக்கிறார். படத்தில் நான் வரும் 3டி காட்சியை மானிட்டரில் பார்த்து மெய்மறந்து போனேன். அது ஒரு பிரமாண்ட அனுபவம். இதற்காக ஷங்கரை பாராட்டுகிறேன். எந்த ஒரு ஹாலிவுட்டின் 3டி படத்துக்கும் இந்த படம் சளைத்தது அல்ல. இந்த 3டி படத்தை பார்க்கும் மக்களின் அனுபவம் எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலுடன் உள்ளேன் என்றார்.இயக்குனர் ஷங்கர் கூறுகையில், ரசிகர்கள் திரைப்படத்துக்குள் சென்று பயணிக்கிற உணர்வை இப்படம் உண்டாக்கும். நேரடியாக 3டி-யில் காட்சிப்படுத்தும் போது ஏற்படும் உணர்வு அற்புதமானது. இது இக்கதைக்கு தேவைப்பட்டதால் 3டி-யில் படத்தை எடுத்தோம். நிறைய ஹாலிவுட் படங்கள் 2டி-யில் எடுத்து 3டி-க்கு மாற்றுவார்கள். இது நேரடியாக 3டி-யில் எடுக்கப்பட்ட படம் என்றார். நடிகர் அக்ஷய்குமார் கூறும்போது, 3டி-யில் வேலை பார்க்கும் போது கடினமாக இருந்தது. ஒவ்வொரு காட்சியும் திட்டமிட்டு எடுக்கப்பட்டது. இந்தியாவுக்கு இது புதுமையான அனுபவம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து