முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தகுதி, திறமை அடிப்படையில் தலைவரை தேர்வு செய்யுங்கள் - காங்கிரசுக்கு அருண் ஜெட்லி அறிவுரை

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தகுதி, திறமையின் அடிப் படையில் காங்கிரஸ் கட்சி தனது தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று மத்திய நிதி யமைச்சர் அருண் ஜெட்லி  அறிவுரை கூறியுள்ளார்.

கடந்த மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், பெர்க்ளி பல்கலைக்கழக மாணவர்களிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தியிடம் வாரிசு அரசியல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “பெரும்பாலான நாடுகளில் ‘வாரிசு அரசியல்’ உள்ளது. நான் மட்டுமல்ல, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் அரசியல் வாரிசுகள்தான். வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தயாராக உள்ளேன். இதுகுறித்து கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதனிடையே காங்கிரஸின் புதிய தலைவராக ராகுல் காந்தி விரைவில் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, அமெரிக்காவின் பெர்க்ளி பல்கலைக்கழக கருத்தரங்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேற்று உரையாற்றினார். அப்போது அவரிடம் காங்கிரஸ் கட்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஜெட்லி அளித்த பதில் வருமாறு:
இந்தியாவில் வரலாற்று ரீதியாகவும் மரபு ரீதியாகவும் காங்கிரஸ் பிரதான இடத்தைப் பிடித்துள்ளது. இதன்காரணமாக அந்த கட்சி மிக நீண்ட காலம் நாட்டை ஆட்சி செய்துள்ளது. ஆனால் காலத்துக்கு ஏற்ப காங்கிரஸ் மாறவில்லை. அந்த கட்சியின் தலைவர்கள் தற்போது தங்களது செல்வாக்கு, வசீகரிப்புத்தன்மையை இழந்துள்ளனர்.

வளர்ச்சியை விரும்பும் இன்றைய இந்திய மக்கள், வாரிசு அரசியலை ஏற்கும் மன நிலையில் இல்லை. எனவே காங்கிரஸ் கட்சி தனது தலைவர்களைத் தேர்வு செய்யும்போது தகுதி, திறமையை மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். அப்போதுதான் இழந்த இடத்தை அந்த கட்சியால் பிடிக்க முடியும்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதக்கலவரம் குறித்த கேள்விக்கு, ‘‘சமூக, மதக் கலவரங்களில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது. சில இடங்களில் வன்முறைகள் நேரிடுகின்றன. இவற்றை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோன்ற வன் முறைகள் அமெரிக்காவில்தான் அதிகம்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து