டெல்லியில் தீபாவளிக்கு பட்டாசு விற்க வெடிக்க தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      இந்தியா
delhi-hc 2017 10 9

புதுடெல்லி : டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கவும், விற்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. டெல்லியில் மாசு அதிகமாக காணப்படுவதால் சுற்றுச் சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு டெல்லி உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதுகுறித்து டெல்லி நீதிமன்றம் நேற்று (திங்கட்கிழமை) அளித்த உத்தரவில்," இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. ஒரு தீபாவளியாவது பட்டாசுகள் வெடிக்காமல் கொண்டாட முயற்சி செய்வோமே“ என்று கூறியுள்ளது. மேலும் தீபாவளி முடியும்வரை டெல்லியில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லியில் காற்று மாசுக்கு தேசிய தலைநகர் பிராந்தியம் (என்சிஆர்) முக்கியக் காரணமாக உள்ளது. டெல்லியின் அதிகரித்து வரும் வாகன நெரிசல் மற்றும் சுற்றுச் சூழல் மாசுக்களை சமாளிக்க கடந்த ஜனவரி 1, 2016 முதல் போக்குவரத்து கட்டுப்பாடுக்கள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி ஒற்றை இலக்கம் கொண்ட வாகனங்கள் ஒற்றை எண்ணுள்ள தேதியிலும், இரட்டை இலக்க எண்கள் இரட்டை எண்களின் தேதிகளிலும் ஓடும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த அறிவிப்புகள் சுற்றுச் சூழலியலாளர்களிடம் நல்ல வரவேற்ப்பைப் பெற்ற இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து