தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 42 தமிழக மீனவர்கள் விடுதலை : இலங்கை அரசு ஒப்புதல்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      இந்தியா
Sri Lanka

Source: provided

புதுடெல்லி : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 42 பேரை விடுவிக்க இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கை அரசுடனான தமிழக மீனவர்களின் சுமூக உறவு என்பது காலங்காலமாக இல்லாத ஒன்றாகும். தமிழக எல்லையில் மீன் பிடித்தாலும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்வதும், படகுகளை சேதப்படுத்துவதும், சில சமயங்களில் குருவிகளை சுடுவது போல் சுட்டு கொள்வதும் நடப்பது வாடிக்கையான ஒன்றாகும்.

அவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைத்து வைக்கப்படுவர். அவர்களை விடுவிக்கக் கோரியும், படகுகளை திரும்ப தர கோரியும் மத்திய - மாநில அரசுகள் இலங்கை அரசிடம் மன்றாடுவதும் அடிக்கடி நடப்பதுதான்.

அந்த வகையில் ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை மாவட்ட மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 42 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்க கோரி இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் கோரிக்கை விடுத்தது.

அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி மீனவர்கள் குடும்பத்தினருடன் கொண்டாடும் நல்லெண்ண அடிப்படையில் 42 பேர் விடுவிக்க இலங்கை அரசு ஒப்புக் கொண்டது. அவர்களை விடுவிப்பதற்கான உத்தரவு இன்று அல்லது நாளை  வெளியாகும் என்று தெரிகிறது. அவர்களின் படகுகளும் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றே தெரிகிறது. 

இலங்கை அரசின் முடிவால் மீனவர்களின் குடும்பத்தார் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து