ராகுலுக்கு வரலாறு, புவியியல் தெரியாது: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      இந்தியா
giriraj-singh 2017 10 9 0

லக்னோ : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வரலாறும் தெரியாது, புவியியலும் தெரியாது என்று பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பாலியாவில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராகுல் காந்திக்கு இந்தியாவின் வரலாறும் தெரியாது. புவியியலும் தெரியாது. சினிமா நடிகர்களைப் போல எழுதிக் கொடுக்கப்பட்ட உரைகளை அவர் படிக்கிறார். அதில்தான் அவர் ஆர்வமாக இருக்கிறார். இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டதாக வெளிநாடுகளில் தவறாக ராகுல் பேசி வருகிறார். உண்மையில் பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் 9 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து கோயிலை கட்டுவார்கள். அவர்களது மதம் வேறாக இருந்தாலும் மூதாதையர்கள் ஒன்றுதான். இவ்வாறு கிரிராஜ் சிங் கூறினார்.


இதற்கு பதிலளித்த உ.பி. காங்கிரஸ் தலைவர் தேவேந்திர பிரதாப் சிங், ‘‘பாஜக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நாட்டில் வளர்ச்சியும் ஏற்படவில்லை. பாஜக மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். தேர்தலில் மக்கள் அவர் களுக்கு பதில் அளிப்பார்கள்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து