திரையரங்குகளுக்கு 50 முதல் 100 சதவீதம் வரை வரிவிலக்கு: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முடிவு

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      இந்தியா
Yogi Adityanath 2017 10 9

லக்னோ : உ.பி.யில் மூடப்பட்ட திரையரங்குகளை மீண்டும் நடத்தினால் ஜிஎஸ்டி வரியில் 50 முதல் 100 சதவீதம் வரை விலக்கு அளிப்பது என முதல்வர் யோகி ஆதித்யநாத அரசு முடிவு செய்துள்ளது.

மற்ற மாநிலங்களை போல், உ.பி.யிலும் பல ஆண்டுகளாக திரையரங்குகள் மூடப்பட்டு வந்தன. இவ்வாறு மாநிலம் முழுவதிலும் இதுவரை 700 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரே திரை கொண்ட அரங்குகள் ஆகும். எனினும் திரையரங்குகளுக்கான கேளிக்கை வரியால் உ.பி. அரசுக்கு கடந்த 6 மாதங்களில் அதிக வருவாய் கிடைத்துள்ளது. இதனால் மூடப்பட்ட திரையரங்குகளை மீண்டும் திறக்க உ.பி. அரசு முயற்சித்து வருகிறது.

இது குறித்து உ.பி. துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா கூறும்போது, “உ.பி. திரையரங்குகளில் கடந்த 6 மாதங்களில் ரூ. 187 கோடி கேளிக்கை வரி வசூ லாகி உள்ளது. இது முந்தைய 6 மாதங்களின் கேளிக்கை வரியை விட 121 சதவீதம் கூடுதல் ஆகும். இந்த வருவாயை உயர்த்த வேண்டி, மீண்டும் திறக்கப்படும் திரை அரங்குகளுக்கு ஜிஎஸ்டியில் 50 முதல் 100 சதவீதம் மானியம் அளிக்க முடிவு செய்துள்ளோம். இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டும் அமலில் இருக்கும்” என்றார்.

உ.பி.யில் கேளிக்கை வரி அதிகம் என்பதாலும் வசூல் இல்லாமலும் திரையரங்குகள் திணறி வந்தன. அதேசமயம், திரையரங்குகளை இடித்துவிட்டு குடியிருப்பு, வணிக வளாகம் போன்றவை கட்டவும் அரசு அனுமதிக்கவில்லை. இதனால் மூடப்பட்ட நிலையிலேயே இருந்த திரையரங்குகள் தற்போது மீண்டும் திறக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து 25 திரையரங்குகள் மீண்டும் திறக்க அரசுக்கு விண்ணப்பித்துள்ளன.

உ.பி.யின் 75 மாவட்டங்களில் 58-ல் ஒன்றுக்கும் மேற்பட்ட திரயரங்குகள் கொண்ட மல்டிபிளக்ஸ் கிடையாது. இவற்றில் 10 மாவட்டங்களில் தற்போது மல்டிபிளக்ஸ் கட்டவும் அரசுக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

பிகாரில் அதிகம் பேசப்படும் போஜ்புரி மொழி, உ.பி.யின் கிழக்கு, மத்தியப் பகுதிகளில் பேசப்படுகிறது. இதனால் போஜ்புரி மொழி படங்களுக்கு உ.பி.யில் அதிக வரவேற்பு உள்ளது. எனவே இம்மொழி திரைப்படங்களை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக போஜ்புரி படப்பிடிப்புக்காக திரைப்பட நகரம் உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து