வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் வானிலை ஆய்வு நிபுணர் தகவல்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      தமிழகம்
rain tn-pdy 2017 9 11

சென்னை, வடகிழக்கு பருவமழை விரைவில் துவங்கும் என்று வானிலை ஆய்வு நிபுணர் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள முதலாவது காற்றழுத்த மண்டலம் எதிர்பார்த்தபடி கொல்கத்தாவை நோக்கி செல்ல இருக்கிறது. அதற்கு பிறகு உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தமிழகத்துக்கு நல்ல மழையை கிடைக்கச் செய்யும். வடகிழக்கு பருவமழை தீபாவளி பண்டிகையையொட்டி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் மாதம் முழுவதும் நல்ல மழை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் கூறியிருக்கிறார். இந்த பருவமழையின்போது சென்னைக்கு 867 மில்லி மீட்டர் மழை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறைந்தபட்சம் 600 மில்லி மீட்டராவது மழை பொழிவு இருக்கும் என்றும் எதிர்பார்ப்பதாக அவர் கூறியிருக்கிறார். இந்த பருவமழையின்போது கிடைக்கும் தண்ணீரை வீணாகமல் சேமிப்பது முக்கியம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து