முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி மாவட்டத்தில் சொகுசு பேருந்துகளில், அரசு நிர்ணயித்திருந்த கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் விஜயகுமார் எம்.பி. அறிவுறுத்தல்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் சொகுசு பேரூந்து உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் முகவர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம், நாகர்கோவில், தமிழ்நாடு வருவாய் சங்கம் கூட்டரங்கில்  மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார்  தெரிவித்ததாவது:-

ஆலோசனைக்கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இயங்கும் சொகுசு பேருந்துகளில், பொதுமக்களுக்கு அரசு மற்றும் சொகுசு பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகளால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை பட்டியலில் உள்ள கட்டணதொகையின்படி, பயணிகளுக்கு பயண சீட்டுகளை வழங்க வேண்டும்.  ஏற்கெனவே, இணையதளம்  மூலம் முன்பதிவு செய்பவர்களுக்கு அதிகமான தொகை பெற்றிருந்தால், அவற்றை அதே வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.  அதிக கட்டணம் வசூல் செய்யும் சொகுசு பேரூந்து மேலாளர்கள் மற்றும் முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு சில சொகுசு பேரூந்துகளில் மூட்டைபூச்சிகள் இருக்கிறது என்று பயணிகளிடமிருந்து புகார்கள் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. இதனை, சம்பந்தப்பட்ட பேரூந்து இயக்கும் உரிமையாளர்களிடமும், பேரூந்து இயக்குபவர்கள் எடுத்துக்கூறி, பேரூந்துகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.  பண்டிகை மற்றும் விழா காலங்களில், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் அவர்களை ஆய்வு செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆய்வு செய்யும் போது அதிக கட்டணம் வசூல் செய்திருந்தால்,  மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும், பயணிகளுக்கு எந்தவொரு சிரமும் ஏற்படாதவகையில், தாங்கள் பேரூந்துகளை இயக்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர்  அ. விஜயகுமார்  தெரிவித்தார்.   இக்கூட்டத்தில், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர்  ரஜினிகாந்த்,  கனகராஜன்,  நாஞ்சில் சந்திரன்,  சகாயம்,  தாணுபிள்ளை மற்றும் சொகுசு பேரூந்துகளின் மேலாளர்கள் மற்றும் முகவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து