முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் தன்னம்பிக்கையே வெற்றி கருத்தரங்கம்

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      தூத்துக்குடி

கோவில்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தன்னம்பிக்கையே வெற்றி என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கம்

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு முதல்வர் ஜோசப் சுரேஷ் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் முத்துச்செல்வம், துணைத்தலைவர் ரவிமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி முகாமை துவக்கி வைத்தார். சமூக சேவைப்பிரிவு தலைவர் பாபு வரவேற்றார்.  கருத்தரங்கிற்கு திருச்செந்தூரை பூர்வீகமாக கொண்டு தன் உழைப்பால் உயர்ந்து சென்னையில் தொழில் செய்யும் பிரபல தொழிலதிபர் கலைமாமணி வி.கே.டி.பாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  தனது சிறப்புரையில், நமது தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டு சென்னையில் தொழில் புரியும் பிரபல தொழிலதிபர்கள் அதிகமானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்யும் குடும்பத்தை சார்ந்து எவ்வித படிப்பு, முதலீடு இல்லாமல் தன்னம்பிக்கையோடு மட்டும் சென்னைக்கு சென்று வெற்றி அடைந்தவர்கள். வெற்றிக்கு தன்னம்பிக்கை வேண்டுமென்ற பல்வேறு கருத்துக்களை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவர்களுக்கு ஊக்கப்பரிசளித்து ஊக்குவித்தார்.  ரோட்டராக்ட் சங்க முன்னாள் தலைவர் இன்பராஜ் நன்றியுரை கூறினார். கருத்தரங்கில் இன்ட்டாராக்ட் பிரிவு தலைவர் ஏசியாபார்ம்ஸ் பாபு, உறுப்பினர் மாரியப்பன், கல்லூரி வணிகவியல் பிரிவு உதவி பேராசிரியர்கள் சந்திரசேகரன், நிர்மலா, லட்சுமியம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் குமாரமுருகன், ரோட்டராக்ட் சங்க செயலாளர் முருகன், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து