முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம்  நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கலெக்டர் இல.சுப்பிரமணியன்  தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார்.இக்கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியன கோரி 467 மனுக்கள் வரப்பெற்றன.  அவை அனைத்தையும் கலெக்டர்  பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

மனு மீது நடவடிக்கை

இக்கூட்டத்தில் முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்தில் இருந்து வரப்பெற்ற மனுக்கள், குறைகேட்பு நாள் கூட்டத்தில் வழங்கப்பட்ட மனுக்கள்,  அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர்களிடம் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மற்றும் அம்மா அழைப்பு மைய கோரிக்கைகள் ஆகியவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நிலுவைக்கான காரணம் ஆகியன குறித்து கலெக்டர்  ஆய்வு செய்தார்.  பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.   முதலமைச்சர் அவர்களின் தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், விழுப்புரம் வட்டம், பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த தேவி, கபெ.(லேட்).ராமு என்பவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3,00,000-க்கான காசோலையை கலெக்டர் இல.சுப்பிரமணியன்  வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி.) மோ.சி.கி.ரஞ்சினி, மாவட்ட சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அ.அனந்தராமன், மாவட்ட வழங்கல் அலுவலர் இராஜேந்திரன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) வீ.ரவி, உதவி ஆணையர் (கலால்) ஏ.இராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவசாமி, அனைத்து வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து