முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு:

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய புதிய வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார்.அதில் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி பேருந்து நிலையத்தில் தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் தூய்மை பணிகளையும் தொடங்கி வைத்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்,பேருந்து நிலையத்தில் பழுதடைந்துள்ள கட்டிடங்களை சீரமைத்து புதுப்பித்திடவும்,பேருந்து நிலையம் அருகிலுள்ள பழமையான ஊரணியை சீரமைத்திடவும் வசதியாக திட்ட அறிக்கை தயாரிக்கும்படி அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.பின்னர் டி.கல்லுப்பட்டி பேரந்து நிலையத்தில் பேரூராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த டெங்கு விழிப்புணர்வு முகாமில் அமைச்சர் பங்கேற்று பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கினார்.இதையடுத்து பேரையூரில் பழுதடைந்த நிலையில் பை-பாஸ் சாலையை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேரில் பார்வையிட்டு அதை விரைவில் புதுப்பித்து சீரமைத்திடுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.அப்போது பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட அமைச்சர் அந்த மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது பேரையூர் வட்டாட்சியர் உதயசங்கர்,முன்னாள் எம்.எல்.ஏ.,கே.தமிழரசன்,மாவட்ட கழக துணைச் செயலாளர் அய்யப்பன்,மாவட்ட சார்புஅணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம்,திருப்பதி,மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் ஆண்டிச்சாமி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி,திருமங்கலம் முன்னாள் யூனியன் சேர்மன் தமிழழகன்,திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றியகழகச் செயலாளர் மகாலிங்கம்,டி.கல்லுப்பட்டி ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் பாவடியான்,முன்னாள் பேரூராட்சி தலைவர் மாணிக்கம்,பேரூராட்சி செயலாளர்கள் நெடுமாறன்,பாலசுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பேரையூர் மற்றும் டி.கல்லுப்பட்டி பேரூராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து