எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் மின்வாரியம் உள்ளிட்ட 3 லட்சத்து 69 ஆயிரம் பொதுத்துறை நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு ரூ.489 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் போனஸ் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொழிலாளர்களின் உழைப்பு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது. உழைப்பாளர்களின் சக்தி தான் ஒரு நாட்டை உயர்த்தி நிறுத்துகிறது. அறிவியல் அபரிமிதமாக வளர்ச்சியடைந்திருந்தாலும், அதனை இயக்குவதும் செயல்படுத்துவதும் மனித ஆற்றல் தான். உற்பத்தியைப் பெருக்குவதிலும் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் உழைப்பாளர்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. உழைப்பாளியை ஊக்குவிக்கும் வகையில், ஊதிய உயர்வு, போனஸ், கருணைத் தொகை, ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிய பெருமைக்குரியவர் ஜெயலலிதா.
உச்சவரம்பு தளர்வு
தமிழ்நாடு அரசு, தொழிலாளர்களின் பணிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, பல்வேறு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் வகையில், 2016-17 ஆம் ஆண்டிற்கான போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளேன். திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015-ன் படி, போனஸ் பெற தகுதியான சம்பள உச்சவரம்பு 21,000 ரூபாய் என மத்திய அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுகளில் 10,000 ரூபாய் என இருந்த தகுதி வரம்பைத் தளர்வு செய்து அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்கள் போனஸ் பெற வழிவகை செய்யப்பட்டதைப் போலவே தற்போது 21,000 ரூபாய் என்ற சம்பள உச்ச வரம்பைத் தளர்வு செய்து அனைத்து ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு தொழிலாளர்களுக்குப் போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளேன். போனஸ் கணக்கிட ஏற்கெனவே 3,500 ரூபாய் என இருந்த மாதாந்திர சம்பள உச்ச வரம்பு திருத்திய போனஸ் சட்டம் 2015-ன் படி, 7,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், 2016-17ஆம் ஆண்டுக்கான போனஸ் மற்றும் கருணை உதவித் தொகையினைக் கீழ்க்கண்டவாறு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
20 விழுக்காடு போனஸ்
லாபம் ஈட்டியுள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அந்த நிறுவனங்களின் ஒதுக்கக்கூடிய உபரி தொகையை கணக்கில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு வரை போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். நட்டம் அடைந்துள்ள பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 10 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும். தமிழ்நாடு மின்சார வாரியம், அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.
கூட்டுறவு, குடிநீர் வழங்கல் ஊழியர்கள்
லாபம் ஈட்டியுள்ள கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையுடன் மொத்தம் 20 விழுக்காடு வரையிலும் ஒதுக்கக்கூடிய உபரி தொகைக்கு ஏற்ப வழங்கப்படும். பிற கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் அனைத்து தகுதியுடைய பணியாளர்களுக்கும் 8.33 விழுக்காடு குறைந்தபட்ச போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மற்றும் சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் "சி" மற்றும் "டி" பிரிவு பணியாளர்களுக்கு சென்ற ஆண்டு வழங்கியதைப் போல 8.33 விழுக்காடு போனஸ் வழங்கப்படும். அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வனத்தோட்ட கழகம், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் தகுதியுடைய தொழிலாளர்களுக்கு, அந்த நிறுவனங்களின் லாப நட்டத்திற்கு ஏற்ப ஒதுக்கக்கூடிய உபரித் தொகையை கருத்தில் கொண்டு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத்தொகையோ அல்லது 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத்தொகையோ வழங்கப்படும்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் பணிபுரியும் ‘ஊ’ மற்றும் ‘னு’ பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காடு போனஸ் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும்.ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டியுள்ள தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி" பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 11.67 விழுக்காடு கருணைத் தொகை என மொத்தம் 20 விழுக்காட்டிற்கு மிகாமல் வழங்கப்படும். ஒதுக்கக்கூடிய உபரி தொகையுடன் லாபம் ஈட்டாத தமிழ்நாடு கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரியும் "சி" மற்றும் "டி" பிரிவு பணியாளர்களுக்கு 8.33 விழுக்காடு போனஸ் மற்றும் 1.67 விழுக்காடு கருணைத் தொகை என 10 விழுக்காடு போனஸ் வழங்கப்படும்.
கருணைத்தொகை
இது தவிர தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 4,000 ரூபாயும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், போனஸ் சட்டத்தின் கீழ் வராத தலைமை கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 3,000 ரூபாயும், தொடக்க கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 2,400 ரூபாயும் கருணைத் தொகையாக வழங்கப்படும்.
இதனால் போனஸ் பெற தகுதியுள்ள நிரந்தர தொழிலாளர்கள் குறைந்த பட்சம் ரூ.8400ம் அதிகபட்சம் ரூ.16800ம் பெறுவர். மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரியும் 3 லட்சத்து 69ஆயிரத்து610 தொழிலாளர்களுக்கு 489 கோடியே 26 லட்சம் ரூபாய் போனஸாக வழங்கப்படும்.அரசின் இந்த நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட வழி வகை செய்யும்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.