முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம் மாநகராட்சி சிவதாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய் தூர் வாரும் பணி: ஆணையார் ரெ.சதீஷ் ஆய்வு

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      சேலம்
Image Unavailable

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலம் சிவதாபுரம் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணிகளை தனி அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஷ் ஆய்வு செய்தார்.

 

 

ஆணையர் ஆய்வு

 

 

 

எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள், ஏரிகளுக்கான நீர்வரத்து பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி புணரமைப்பு பணிகள் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் சேலம் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண்-22–ல் சிவதாபுரம் பகுதியில் அமைந்துள்ள சேலத்தான்பட்டி ஏரி நீர்வழி பாதை மற்றும் அப்பகுதிகளில் அமைந்துள்ள சாக்கடை கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்பணிகளை ஆய்வு செய்த ஆணையர் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் சாக்கடை கால்வாய்களை தூர்வாரி,அக்கால்வாய்களிலிருந்து பெறப்படும் மணல் உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அப்புறப்படுத்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலருக்கு உத்திரவிட்டார். பின்னர் அப்பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் குளோரின் அளவு சரியான அளவில் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஜாகீர் சின்னம்மாபாளையம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை பார்வையிட்டார்.

முன்னதாக கோட்டம் எண்-27-ல் உள்ள இராஜேந்திரா சத்திரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புணரமைப்பு பணிகளுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் அப்பகுதியில் சாக்கடை தூர்வாரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

இவ்வாய்வின் போது செயற்பொறியாளர் ஜி.காமராஜ், உதவி ஆணையாளர் பி. ரமேஷ்பாபு, உதவிசெயற்பொறியாளர் வி. திலகா, உதவி பொறியாளர்கள் ஜி.சுமதி, டி. அன்புசெல்வி ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து