வளசரவாக்கம்-ராமாபுரத்தில் கொள்ளையர்கள் 4 பேர் கைது

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      சென்னை

வளசரவாக்கம்-ராமாபுரத்தில் கொள்ளையர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வளசரவாக்கம் பகுதியில் செயின் பறிப்பு கொள்ளையில் ஈடுபடுபவர்களை பிடிக்க உதவி கமி‌ஷனர் சம்பத், மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் குமரன், ஆல்பின்ராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

பறிமுதல்

 இந்நிலையில் ஆற்காடு சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் போரூர் ராமகிருஷ்ணா நகர் 2-வது தெருவைச் சேர்ந்த கார்த்திக் என்கிற டோரி கார்த்திக், நெசபாக்கம் கானு நகரை சேர்ந்த கார்த்திக் பாண்டியன் என்கிற கோவூர் கார்த்திக் என்பதும் இவர்கள் மீது பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளதும் தெரிந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 சவரன் நகை, 600 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராமாபுரம் பகுதியில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வந்த தண்டையார்பேட்டையை சேர்ந்த பாலாஜி, ஆவடியை சேர்ந்த நவஹருள் ஆகிய 2 பேரை பிடித்தனர். அவர்கள் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் உள்ளன. அவர்களை போலீசார் கைது செய்து 2 விலை உயர்ந்த லேப்டாப்களை பறிமுதல் செய்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து