நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      தமிழகம்
TN assembly 2017 07 01

சென்னை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை நாளை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து ஏழாவது ஊதியக்குழு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை கடந்த வாரம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியது. இந்நிலையில், நாளை தமிழக அமைச்சரவை கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. தமிழக அமைச்சர்கள் அனைவரும் இக்கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து