ஏடிஎம் கார்டு முடங்கியது : சென்னையை பார்க்க காஞ்சி கோவிலில் கையேந்திய ரஷ்ய இளைஞர்

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      தமிழகம்
russian-youth 2017 10 10 1

Source: provided

காஞ்சிபுரம் :  சுற்றுலா வந்த ரஷ்ய இளைஞரின ஏடிஎம் கார்டு முடங்கியதால் காஞ்சிபுரம் கோயிலில் கையேந்தி யாசகம் கேட்டிருக்கிறார். அவருக்கு போலீசார் உதவி செய்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

ரஷ்யாவை சேர்ந்தவர் எவிட்னி. இவர் தமிழகத்தைச் சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளார். மாமல்லபுரத்தைச் சுற்றி பார்த்த அவர் அங்கிருந்து குமரக்கோட்டம் முருகன் கோயிலுக்கு சென்றார்.

இதைத் தொடர்ந்து பணம் எடுப்பதற்காக அங்குள்ள ஏடிஎம் மையங்களில் அவர் கார்டை பயன்படுத்தியதில் அந்த கார்டு முடக்கப்பட்டது தெரியவந்தது. கையில் இருந்த பணம் காலியாகிவிட்ட நிலையில் சென்னை செல்வதற்காக கோயில் வாயிலில் நின்று பக்தர்களிடம் யாசகம் கேட்டார்.


தகவலறிந்த சிவகாஞ்சி போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது விசாரணை நடத்தியதில் அவர் பெயர் எவிட்னி என்றும் தமிழகத்தை சுற்றி பார்க்க வந்த இடத்தில் ஏடிஎம் கார்டு முடக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு போலீஸார் பணம் கொடுத்து சென்னைக்கு அனுப்பிவைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து