டெக்சாஸ் மாகாண பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச்சூடு : மர்ம நபருக்கு வலைவீச்சு

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      உலகம்
texas university 2017 10 10

Source: provided

டெக்சாஸ் :  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டெக் பல்கலைக்கழகத்தில் இந்திய நேரப்படி நேற்று காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

டெக்சாஸ் மாகாணத்தில் லப்பாக்கில் பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு இந்திய நேரப்படி நேற்று காலை மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு போலீஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் பல்கலைக்கழகத்தில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து டெக்சாஸ் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்துக்கு அருகில் உள்ள குடியிருப்புவாசிகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லுமாறு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். துப்பாக்கி சூடு நடத்திய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து