கேரளா பாரதிய ஜனதா அலுவலகத்தில் இரும்பு குண்டுகள், பட்டா கத்திகள் பறிமுதல்

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      இந்தியா
kerala bjp 2017 10 10

Source: provided

கண்ணூர் :  கேரளா பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் இரும்பு குண்டுகள், பட்டா கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் காலூன்றுவதற்காக பாஜக தலைவர் அமித்ஷா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை களமிறக்கி பேரணி நடத்தப்பட்டது. ஆனாலும் காங்கிரஸும் இடதுசாரிகளும் வலுவாக இருக்கும் கேரளாவில் பாஜகவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை.

 இதனால் கேரளா பேரணியில் இருந்து பாதியிலேயே அமித்ஷா கிளம்பிச் சென்றனர். இந்நிலையில் பானூரில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டனப் பேரணி நடத்தினர். அப்போது பாஜகவினர் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். பாஜகவினரின் வெறிச் செயலில் 18 பேர் படுகாயமடைந்தனர்.


இதையடுத்து கண்ணூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் நேற்று அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்து இரும்பு குண்டுகள், பட்டாகத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து