1,75,000 மக்களை ஊரை விட்டே ஓட வைத்த கலிபோர்னியா காட்டுத் தீ : 10 பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      உலகம்
california wildfire 2017 10 10

கலிபோர்னியா :  அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் தொடர் காட்டுத் தீ நகரம் எங்கும் பரவி வருகிறது.

சாண்டா ரோசாவின் காடுகளில் எரியத் தொடங்கிய இந்தத் தீ தற்போது நகரம் முழுக்க பரவியுள்ளது. இதனால் பத்து பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர். கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் இந்தப் பகுதியில் அடிக்கடி காட்டுத் தீ ஏற்படுவது வழக்கமாகும். தற்போது இது மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் காட்டுத் தீ ஏற்படுவதற்கு பெயர் போனது. வருடத்தில் அதிக நாட்கள் இந்த மாகாணம் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளது . முக்கியமாக கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் சாண்டா ரோசா நகரத்தில் இது போன்ற காட்டுத் தீ ஏற்படுவது வழக்கம். ஒவ்வொரு முறை காட்டுத் தீ ஏற்படுவதற்கு முன்பும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆனால் இந்த முறை அங்கு மிக மோசமான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தொடர்ந்து 14 காட்டுத்தீ அந்த மாகாணத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திடீர் என்று ஏற்பட்ட இந்தக் காட்டுத் தீ தற்போது கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பரவி வருகின்றது. சாண்டா ரோசாவின் நகரத்திற்குள்ளும் தற்போது இந்தக் காட்டுத் தீ பரவி உள்ளது. இதனால் இரண்டே நாட்களில் நகரத்தில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமான பகுதிகள் அழிந்து போய் உள்ளது.

12 மணி நேரத்தில் 20,000 ஏக்கர் நிலத்தை மொத்தமாக அழித்துள்ள இந்தக் காட்டுத் தீ, நகரத்தில் இருக்கும் பல மருத்துவ மனைகளை சூறையாடி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அது தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் சாண்டா ரோசா அரசு மருத்துவமனையையும் நெருங்கி வந்துள்ளது. அந்த மருத்துவமனையில் மிக அதிக அளவில் நோயாளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த மருத்துவமனையில் தீ பற்றினால் அது வெடிக்கும் அபாயம் உள்ளது என கருதப்படுகிறது

இந்த தீ விபத்தால் இது வரை 175,000 பேர் கலிபோர்னியாவை விட்டு வெளியேறி இருக்கின்றனர். அது மட்டும் இல்லாமல் 10 பேர் தீயிற்கு இரையாகி பலியாகியுள்ளனர். மேலும் 1000 கணக்கானோர் மருத்துமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து