அமித் ஷா மகன் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது: ராஜ்நாத் சிங்

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      இந்தியா
Rajnath Singh 2017 10 10

புதுடெல்லி : பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் மீதான குற்றச்சாட்டுகளில் எந்த ஓர் அடிப்படை ஆதாரமும் இல்லை, எனவே விசாரணைக்கு அவசியமில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் தேசிய விசாரணை அமைப்பின் புதிய தலைமைச் செயலகத்தைத் திறந்து வைத்த ராஜ்நாத் சிங், இம்மாதிரி குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுப்பப்படுவது சகஜம்தான் என்றார். “இது போன்ற குற்றச்சாட்டுகள் கடந்தகாலங்களிலும் சுமத்தப்பட்டது. அவ்வப்போது இவ்வாறான குற்றச்சாட்டுகள் வருவது வழக்கம். இவற்றுக்கு எந்த ஓர் ஆதாரமும் இல்லை” என்று ராஜ்நாத் சிங் நிகழ்ச்சிக்கிடையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

2014 பா.ஜ.க ஆட்சிக்கு வந்த பிறகு அமித் ஷா மகன் ஜெய் ஷாவுக்குச் சொந்தமான நிறுவனத்தின் வர்த்தகம் பெரிய அளவில் உயர்ந்திருப்பதாக தி ஒயர் என்ற செய்தி இணையதளம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு அவதூறானது, தவறானது என்று அமித் ஷா மகன் ஜெய் ஷா ஏற்கெனவே மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து